facebook
@sheik_twitts குடிகார புருஷன் இறந்த பின்னால் ஒரு பெண் வாழ்ந்து காட்டுவது என்பது பல ஆயுள் தண்டனைகளுக்குச் சமம்!
 அம்மா கொடுத்த ஃபேனுக்குக் கூட பணிவு அதிகம். ஸ்விட்ச் போட்ட உடனே தலை கவிழ்ந்துடுது! - தேவி சண்முகம்
நான் இருட்டிலும் பேசுவேன்; வெளிச்சத்திலும் பேசுவேன்; மைக்கிலும் பேசுவேன்; மைக் இல்லாமலும் பேசுவேன் - வைகோ பூவை பூன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம்... நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்! - தேவி கமல்
 @shameera_roshna போனும் அம்மாவும் ஒண்ணுதான்... நான் போன் நோண்டும்போது போனை விட அம்மா ரொம்ப சூடாகுறாங்க!
ஆணின் உண்மையான முகம் தண்ணி அடிக்கும்போதும்... பெண்ணின் உண்மையான முகம் தண்ணி பிடிக்கும்போதும் தெரிகிறது!
@Its_mithra உங்களின் தவறுகளை விமர்சித்துக்கொண்டிருக்கிறேன். என் தவறுகளுக்கான ஆறுதல் அதுவே...
என் மாமனார் பேர்ல விஜய் ஆன்டனி நடிச்ச படம் வந்திருக்காமே! - முனீஸ்வரன் முனீஸ்வரன்
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - அதிமுக எம்பிக்கள் # கேக்குறதுதான் கேக்குற... பன்னீர்செல்வத்துக்கு பத்ம விபூஷணும் சேத்து கேளுடா தம்பி! - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
@naatupurathan நான்கு நாள் முன்னாடி 7 பேரை விடுதலை பண்றதா சொன்னாங்க, இப்ப நளினியோட பரோலுக்கு எதிர்ப்பாம்! # அட நான்சென்ஸ்களா... நடிக்கறதகூட ஒழுங்கா செய்ய மாட்டீங்களா?
@sowmya_16 நன்றி சொல்லக்கூட காலதாமதம் ஆகட்டும், மன்னிப்பு மட்டும் கேட்கணும் என நினைத்தவுடன் கேட்டு விடுங்கள். இல்லையேல் மனம் மாறிவிடும்.
தேர்தல் விதிமுறைப்படி இன்றிலிருந்து தமிழக அரசாங்கம் செயல்படக்கூடாது - தேர்தல் ஆணையம் # தூங்கிட்டு இருக்கிறவன எழுப்பி, ‘நல்லா தூங்குங்க’ன்னு சொல்றாங்களே! - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
எங்களால்தான் அதிமுகவுக்கு 8 சதவீத ஓட்டுகள் அதிகம் கிடைத்தன - சரத்குமார்# சதவீதம் என்பதைத் தவிர்த்து படிக்கவும்... - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
7 பேர் விடுதலையாக ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க வேண்டும்: நாஞ்சில் சம்பத் # அதாவது, அம்மா மறுபடியும் முதல்ல இருந்து புரோட்டா திங்கப் போறாங்களாம்... - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை - தமிழருவி மணியன்# முதல்முதல்ல டிரெயின்ல போறீங்க... வித்அவுட்லயாவது போங்க பாஸ்! - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
பிரியாணி விரும்பிகளின் கனிவான கவனத்திற்கு... ஒரு இடத்தில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்டோர் கூட்டாக பிரியாணி சாப்பிட்டால் தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. - வேடியப்பன் எம் முனுசாமி
தமிழக மக்கள்: அமைச்சரே! நீ என்ன பண்ற, ஊரெல்லாம் அம்மா ஸ்டிக்கர் ஒட்டு... தேர்தல் ஆணையம்! நீ என்ன பண்ற, அவங்க ஒட்ற ஸ்டிக்கரையெல்லாம் மறைச்சுரு... மாநகராட்சி! நீ என்ன பண்ற, மொத்தமா எல்லா ஸ்டிக்கரையும் கிழிச்சுட்டு பெயின்ட் அடி! மற்ற மாநில மக்கள்: இதுக்கு நல்லாருந்த சுவரை அப்படியே விட்ருக்கலாமே..?தமிழக மக்கள்: நாங்க கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல! - பூபதி முருகேஷ்
# யுவர் ஆனர்... அடிச்ச காசை பூரா, வெங்கையா நாயுடுவிடம்தான் கொடுத்து வச்சிருக்கேன்னு சொல்லிடப் போறார்! - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
விஜய்மல்லையாவிடம் இருந்து ஒரு பைசா விடாமல் வங்கிகள் வசூல் செய்ய வேண்டும் - அருண் ஜெட்லி
கணவரும், மனைவியும் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். டி.வியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை கணவரிடம் கேட்டாள் மனைவி. மனைவி:இப்ப பேட்டிங் பண்றவர்தான் சச்சினா? கணவர் :சச்சின் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளாச்சு! மனைவி:ஓ, அப்படியா..? அங்க பாருங்க, இன்னொரு விக்கெட் விழுந்துடுச்சு! கணவர் :ஏற்கனவே நடந்ததைத் திரும்பக் காட்டுறாங்க... மனைவி:இந்தப் போட்டில நிச்சயமா ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும்னு நினைக்குறேன்! கணவர் :போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும் பாகிஸ்தானுக்கும்தான் நடக்குது மனைவி:அப்படியா..? இன்னும் எத்தனை ரன் எடுக்கணும்? ஜெயிக்கிறதுக்கு? கணவர் :36 பந்துல 72 ரன்... மனைவி:அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம் போல... ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப் போதுமே! (பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர், டி.வியை ஆஃப் செய்துவிட்டு எழுந்து சென்று விடுகிறார். ‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல், டி.வியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார் மனைவி. எரிச்சலடைந்த கணவர், மனைவியை வெறுப்பேத்த நினைக்கிறார்). கணவர் :இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன? மனைவி:சீரியல் பார்த்துட்டு இருக்கேன்ல... என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!
அதிமுகவிற்கும் மக்கள்நலக் கூட்டணிக்கும் மட்டுமே போட்டி - திருமாவளவன்வாயை மூடிச் சிரிக்கவும்...
- குமரன் கருப்பையா
@ArchanaArchuu கணவன் ‘டயட்’ல இருக்கணும், மனைவி ‘கொயட்’டா இருக்கணும், குழந்தை ‘க்யூட்’டா இருக்கணும். அப்போ குடும்பம் சூப்பரா இருக்கும்!
@theeviravaathi கடவுளும் ஒரு சுயநலவாதிதான்; தன்னை நினைக்காமல் விட்டுவிடுவோம் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னையைக் கொடுத்துக்கொண்டே இருப்பான்!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் படங்கள் ஒட்டப்படும்.# இனி ‘வேட்பாளர கடைசியா வோட்டு கேட்டு வரும்போது பார்த்தது’னு சொல்லாதீங்க... கடைசியா வாக்குப்பதிவு இயந்திரத்துல பார்த்ததுனு மாத்திக்கோங்க! - தடாகம் முகுந்த்
எலெக்ஷன் கமிஷன் வாகன சோதனையில, ‘‘ஏது இந்த பணம்?’’னு கேக்கற அளவுக்கு பந்தாவுக்காவுது நம்மகிட்டயும் கொஞ்சம் பணத்தை கையில புழங்க விடு ஆண்டவா! - ஏழுமலை வெங்கடேசன்
‘சேறு’ என்ற வார்த்தையை உருவாக்கி, அதில் கால் வைத்தால் ‘சோறு’ ஆகும் என நுட்பமாக உணர்த்தும் மொழி தமிழ்... - சுப்ரமணியம் சூபோ
@kountermoney சாமி நகையைக் காணோம்னு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் பண்ணுனா, ‘‘கடவுளே! எப்படியாவது இந்த கேஸை நீதான் கண்டுபுடிச்சு குடுக்கணும்’’னு வேண்டிக்கிறாருபோலீஸ்காரர்!
@JanuBhaskarG பங்களாதேஷ் மக்களுக்கு குடியுரிமை, ஆதார், ரேஷன் அட்டை. ஆனால் 25 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இன்னும் அகதிகள்தான்...
@MrMarmaYogi ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட அதிமுக எம்பிக்கள்...# மத்திய அரசு: அம்மாவுக்கு ஒரு பாரத ரத்னா விருது பார்சல்!
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில் எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம் ஹீரோயின்ஸ்?’’ ‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’ ‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’ ‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’ ‘‘98’’‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’ ‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம் முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’ ‘‘நேத்து என்னோட பர்த் டே!’’ ‘‘!!!!!’’
@aditigowtwits ஜெ.வுக்கு பாரதரத்னா விருது கேட்டு அதிமுகவினர் வேண்டுகோள்... # தட் மொமன்ட்... நல்லா ஸ்டிக்கர அழுத்தமா ஒட்டுங்க!
அரசியல் தலைவர்களைப் பற்றி விமர்சித்தால் தண்டனை என நான் கூறியதாக வந்த தகவல் பொய்யானது - தேர்தல் ஆணையர் # அப்ப ‘அரசியல்வாதிகள இஷ்டத்துக்கு திட்டலாம்’னு ஒரு அறிக்கை குடுங்க... அப்பதான் நம்புவோம்! - ரிட்டயர்டு ரவுடி
@aditigowtwits ஆட்கள் தேவை என்ற வாசகம்... ‘அடிமாடுகள் தேவை’ என்பதன் சீர்படுத்திய வாசகமே!
@ItzYourRavI ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட அதிமுக எம்பிக்கள்...# கேளுடா கேளு... அண்ணெங்கிட்டதான கேக்குற... ஆஸ்கரே கேளு! ஸ்டிக்கர்களுக்கு ஓய்வு! - கார்த்திக் துரைசாமி
|