ஜோக்ஸ்
‘‘தலைவர் என்ன சொல்றார்..?’’ ‘‘ஏமாற்றத்தைத் தவிர்க்க ஆன்லைன்லயும் கூட்டணிக்கு முன்பதிவு செய்யலாம்ங்கறார்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி
 ‘‘ஸ்டிக்கரை ஒட்டினதுக்காகவா அவரைக் கட்சியை விட்டு நீக்கிட்டாங்க..?’’ ‘‘ஆமா, தலைகீழா ஒட்டிட்டாராம்..!’’ - தீ.அசோகன், சென்னை-19.
‘‘நாற்பதும் நமதே...’’‘‘தலைவரே! தமிழ்நாட்டுல 234 தொகுதிகள் இருக்கு!’’‘‘கூட்டணியில நமக்கு ஒதுக்கப் போற தொகுதிகளைச் சொன்னேன்யா...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘தலைவர் கட்சியை விட்டு விலகப் போறாரா... எதுக்கு?’’‘‘கட்சிக்காக இரவு, பகல் பார்க்காமல் போஸ்டர் ஒட்டினவருக்கு சீட் தராமல், நேற்று வந்து ஸ்டிக்கர் ஒட்டினவருக்கு சீட் கொடுத்துட்டாங்களாம்..!’’ - மு.க.இப்ராஹிம், வேம்பார்.
ஸ்பீக்கரு...
‘‘கூட்டணிக்கு வருபவர்களுக்கு 234 தொகுதிகளையும் கொடுக்கத் தயார். எனக்கு அவர்கள் முதலமைச்சர் பதவியை கொடுக்கத் தயாரா?’’ - பெ. பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தையிலிருந்து தலைவரை ஏன் நீக்கிட்டாங்க..?’’ ‘‘2021 தேர்தல் செலவுக்கும் சேர்த்து பணம் கேட்டாராம்...’’ - அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.
ஸ்பீக்கரு...
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்துவிடப் போகிறோம் என விமர்சனம் செய்கிறார்கள். ஊழல்தான் செய்வோம் என்கிற உண்மைகூடத் தெரியாத இவர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
|