உள்ள(த்)தைச் சொல்கிறோம்
 அறிதுயில் எனும் சிவராத்திரி என்ற தலையங்கம் அருமை! விழிப்பு நிலை + சொப்பனம் + தூக்கம் + ஞானம் என்ற துயில்களின் நிலைப்பாட்டை விவரித்ததுகூட ஞானத்தை தருகிறது. சிவராத்திரியின் மகிமையை உணர்த்தி அதனை அறிதுயிலாக விளக்கிய விதம்கூட வாசகர்களுக்கான யோகம்தான்! - எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.
மகான்களின் ஆசி, எல்லாவற்றையும் இனிதாக நடத்தும், என்பதை ரமணி அண்ணாவின் அனுபவம் மூலம் உணர்ந்தோம் மனம் நெகிழ்ந்தோம். - கே. பிரபாவதி, கன்னியாகுமரி.
மகத்தான பலன்களை வாரி வழங்கும் மகாசிவராத்திரி என்று முத்துக்கள் முப்பதாகக் கோர்த்து தந்திருப்பது மிகவும் பயன்மிக்கது. சிவராத்திரியின் அடிப்படையிலிருந்து அதன் உச்சமான பலன்கள் மற்றும் ஞான நிலை வரை அலசித் தந்திருப்பது அபாரம்! - மருதூர் மணிமாறன், திருநெல்வேலி.
இந்த இதழில் இணைப்பு இதழாக கொடுக்கப்பட்ட மாசி மாத ராசி பலன்கள் அற்புதமோ.. அற்புதம். அந்தந்த ராசிகளுக்கு ஏற்றால் போல் பரிகாரங்களையும் கூறிய ஏ.எம்.ராஜகோபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. - வி.செல்வராஜ், சென்னை.
‘கொனார்க் சூரியக் கோவில்’ சிற்பமும் சிறப்பும் பகுதியாகத் தரப்பட்டிருப்பது மிகச் சிறப்பானது. படங்களும் தகவல்களும் பரவச மூட்டுகின்றன. - ஆர். உமா காயத்ரி, நெல்லை.
நஹி நிந்தா நியாயம் என்றால் என்ன? என்ற சந்தேகம் என் மனதிற்குள்ளும் இருந்திருக்கிறது. அந்த சந்தேகத்தை, தெளிவு பெறுவோம் பகுதி தெளிவுப்பட செய்திருக்கிறது. நாங்கு நியாயங்களையும் மிக விரிவாக விளக்கமாக விளக்கியமைக்கு தேஜஸ்விக்கு நன்றிகள் பல! - சேலம்.ரவி.
‘குண்டலினி சக்தியை எழுப்பும் சௌத்திராஹரயோகினி’ தொகுப்பு அம்பிகையின் ஆனைகளை ஏற்று செயல்படும் யோகினிகள் பற்றியது என்பதால் யோகினிகள் தோற்றம், உட்பட அதன் சக்தியை தரிசிப்பது வரை இதுவரை அறியாததை அறிந்து கொள்ள முடிகிறது - என்.ஜானகிராமன், திருநெல்வேலி.
``தென் குறுங்குடி நம்பியை என் சொல்லி மறப்பனோ’’ என்ற கட்டுரையை படிக்க படிக்க அமிர்தமாக இருந்தது. அதுவும், திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் தந்த திருத்தலம் என்பது புதிய தகவலாக இருந்தது, மேலும், பாபா தொடரையும் தவறாது படித்து வருகிறேன். ``ஸமர்த்தரும் ஸாயிநாதரும்’’ என்னும் கட்டுரையை படித்ததும், மனதிற்குள் ஓர் வித மன அமைதி கிடைத்தது. - சூரியா, கோவை.
‘நான்கு ஜாமங்களில் வழிபட வேண்டிய நான்கு சிவாலயங்கள் தொகுப்பும் படங்களும் சிவராத்திரியின் அட்வான்ஸ் பிரார்த்தனையாகி, அகம் குளிரச் செய்தது. வேளா வேளைக்குரிய பூஜை நியதிகளைக் குறிப்பிட்டிருப்பது ஆத்மாவின் மணமாகிவிட்டது! - ஆர்.ராஜகோபாலன், நெல்லை.
``அன்பான அரக்கி’’ சீதாவிற்கு எத்தகைய பெரும் உதவிகளை செய்திருக்கிறாள்! படிக்க படிக்க கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த அன்பான அரக்கி, வீடணனின் மகள் என்பதனை தெரிந்து கொண்டதும் ஆச்சரியமாக இருந்தது! - கலைச்செல்வி, கரூர்.
‘கலை நுணுக்கம் மிக்க நந்தி’ இதன் சிறப்பின் பெருமையைக் கண்டு வியந்தேன். ஊற்று நீர் நந்தியின் வாய் வழியாக ஆலயம் உள்ளே சென்று மற்றொரு நந்தி மூலம் வெளியேறி அதே குளத்தில் செல்கிறது. படிக்க படிக்க பரவசம் அடைந்தேன். - வண்ணை கணேசன், சென்னை.
|