உள்ள(த்)தைச் சொல்கிறோம்



‘புதுப்புனல் ஆடிய உவகை’

தெய்வ வாகனங்கள் வரிசையில் அற்புதமான வாகனங்கள்பற்றி ஒருசேர கண்ட பலன் யாருக்கு வாய்க்கும். ஆன்மிகம் பலனுக்கு அன்றி.
- செ. ராஜம்மா நாராயணசாமி, ஒக்கூர் (அஞ்சல்),சிவகங்கை மாவட்டம்.

அன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம் பற்றி அறிந்தோம். சுவாமி அம்பாள் வாகன பவனி கண்டுள்ளோம். ஆனால், வாகனங்களின் தத்துவார்த்தம் தெரியாமல் இருந்தோம். இப்போது புதுப்புனல் ஆடிய உவகை பெற்றோம். பக்தி வாகனம் வியப்பை கூட்டியது.
-  காவிரி புனிதர் அரிமளம். R.தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76

தெய்வ வாகனங்கள் பக்தி ஸ்பெஷலாக வந்திருந்த இந்த இதழில் இடம் பெற்றிருந்த எந்தெந்த தெய்வங்களுக்கு என்னென்ன வாகனங்கள், அவைகளின் பின்னணி ஆகியன படு சுவாரசியம்! எந்த கோயில் என்ன பிரசாதம்? என்ற தொகுப்பும் ரசனைக்குரியதாயிருந்தது.
- இரா.வளையாபதி, 51, தோட்டக்குறிச்சி

சமய சொற்பொழிவாளர்களுக்கு சரியான இலக்கியத்தீனிதான் தெய்வ வாகனங்கள் இதழ். பறவைகள், விலங்குகளென பல்வேறு தெய்வங்களின் வாகனங்களை அருமையாகத் திரட்டித் தந்த விதம் அபாரம். அருளுரையாளர்களுக்கான அலாரம்.
- ஆர்.ஜி.பாலன்,  திசையன்விளை-627657

தெய்வ வாகனங்களை வைத்தே ஒரு பக்தி ஸ்பெஷலை ஆன்மிகம்தான் தர முடியும் என்பதற்கு மகத்தான எடுத்துக்காட்டு.இந்த இதழ் என்பதால் இதழ்கள் குவிய ஒரு ‘ஓ’ போட்டேன்.
- ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

‘விடை’ மேல் பவனி என்பது ‘நந்தி’ மேல் என்பதும் காளை வாகனம் என்பதும் கவனத்தில் கொண்டு ‘ஆளுமைத்திறனை அருளும் அதிகார நந்தி’ என்று பக்தி வைத்துள்ள வரிகள் அபாரம்.
- ஆர்.விநாயகராமன், செல்வமருதூர், திசையன்விளை.

அடேங்கப்பா துவக்கமே தூள்! தெய்வ வாகனங்களின் ஸ்பெஷல் என்பதால் விநாயகரின் எலி வாகனம் மூலம் பிள்ளையார் சுழி போட்டு பின்னி விட்டீர்கள்.
- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை-627657

விநாயகருக்கு ஏன் எலி வாகனம்? என்ற ஐயத்திற்கு விடை தந்த கட்டுரை தொடங்கி அன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம் வரை கட்டுரைகளைத் தொகுத்து இதுவரை யாரும் வழங்கிடாத தெய்வ வாகனங்களின் மகத்துவம் கூறும் ஒரு வித்தியாசமான சிறப்பிதழைத் தயாரித்து அளித்துவிட்ட ஆன்மிகம் பலன் இதழின் இறை பணிக்கு இதயம் கனிந்த பாராட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன்.
- அயன்புரம், த.சத்திய நாராயணன்,

தெய்(வீக)வ வாகனங்கள் ஒவ்வொன்றையும் பிள்ளையாரின் ‘எலி’முதல் ‘யாளி’ வரை உள்ள அனைத்தையும் ஒன்று திரட்டி வெளியிட்டுள்ளது பிரமிக்க வைத்தது. அந்தந்த வாகனங்கள் ஏன் என்ற விளக்கமும், புகைப்படங்களையும் காண்பித்திருந்ததும் பாராட்டுக்குரியவை. படித்து பாதுகாக்க வேண்டிய பெட்டகம்.
- சுகந்தி நாராயண், சென்னை - 39

திருவிழாவாக் காலங்களில் மற்றும் விசேஷ காலங்களில் அம்மனை பல்வேறு வாகனங்களில் பவனி வருவதை கண் குளிர தரிசனம் செய்துள்ளோம். ஆனால், அன்னை பவனி வரும் பல்வேறு வாகனங்களின் பெருமையை அதன் தத்துவத்தையும் படித்து அதன் பொருளை உணரும்போது ஆச்சரியப்பட வைத்தது. வாகன பவனியில் இத்தனை மகத்துவங்களா என வியக்க வைத்தது இனி வாகனங்களை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.
- D. ரவி (D.RAVI), திருவான்மியூரி், சென்னை - 41