Super Hero Therapy



மேட்டர் புதுசு

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹாரிபாட்டர் போன்ற கதாபாத்திரங்கள் மீது நம் எல்லோருக்குமே ஒரு ஆச்சரியம்  இருக்கும். பெரியவர், சிறியவர் வித்தியாசமின்றி ஏலியன்ஸ், பேய் படங்கள், சயின்ஸ் ஃபிக்சன் கதைகள் மீது உள்ள ஈர்ப்பினாலேயே நம்மூரில் எந்திரன், 24 போன்ற சயின்ஸ் ஃபிக்சன் படங்கள் வெற்றியடைந்தன. நிஜத்தில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத செயல்களை, அசாதாரண திறமையோடு திரையில்  இந்த கதாபாத்திரங்கள் செய்வதை பார்த்து பிரமிப்படைகிறோம்.  

இதுபோன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை நம் வாழ்க்கையின் இன்ஸ்பிரேஷனாக அடையாளப்படுத்திக் கொள்வது, நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. 
இதை மனநல மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், நியூயார்க் ஏலியன்ட் இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியும், மருத்துவ உளவியலாளருமான  டாக்டர் ஜனினா ஸ்கேர்லெட் ‘சூப்பர் ஹீரோ தெரபி’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். சூப்பர் ஹீரோ தெரபியைப்பற்றியும், மனநல சிகிச்சையில் அது எந்த அளவிற்கு உதவுகிறது என்பதைப்பற்றியும் மருத்துவ உளவியலாளரான ஸ்நேகா ஜார்ஜிடம் கேட்டோம்...