டாக்டர் அனிதாவாக ஜூலி!



நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை ‘டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்’  என்ற பெயரில் படமாக்குகிறார் இயக்குநர் அஜய் எஸ். குறும்படங்களை இயக்கிய இவர் தேசிய விருதைக் குறிவைத்து இந்தப் படத்தை இயக்குவதாகக் கூறுகிறார்.

ஜல்லிக்கட்டு மற்றும் தொலைக்காட்சியில் பெரிய அளவில் பாஸான நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, அனிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு தந்தையாக ‘ஆய்வுக்கூடம்’ படத்தில் நடித்த ராஜ கணபதி நடிக்கிறார்.

50 வருடங்களுக்கு மேலாக 40 ஆயிரம்  பாடல்களைத் தாண்டி திரையிசைத் துறையில் இருக்கும் பி.சுசீலா இந்தப் படத்துக்கு இசையமைப்பதாக  தகவல் பரவியது. “இசையமைக்கும் ஆசை எனக்கு இல்லை, வாழ்நாள் முழுக்க பாடிக்கொண்டே இருப்பேன்” என்று சொல்லியிருப்பதன் மூலம், இந்தப் படத்துக்கு சுசீலா இசையமைக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

- நெல்பா