பேய்ப்படத்தில் பூர்ணா!



“கணவர், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான இல்லறவாழ்வில் ஈடுபட்டிருக்கும் பூர்ணா திடீரென ஓர் அதிர்ச்சி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. தன்னுடைய குழந்தைகளைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் பேயிடமிருந்து எப்படி காப்பாற்றினார் என்பதே ‘குந்தி’ என்கிற படம்” என்கிறார் எஸ்.எஃப்.எஃப். டிவி நிறுவனத்தைச் சார்ந்த ஏ.ஆர்.கே.ராஜராஜா.

தெலுங்கில் ‘ராக்ஷசி’ என்கிற பெயரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் படத்தை தமிழ்ப்படுத்தியிருப்பவர்தான் இந்த ராஜராஜா. பண்ணா ராயல் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு யஜமன்யா இசை. படத்தில் முப்பது நிமிடத்துக்கு இடம் பெற்றிருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் பிரும்மாண்டமாக ‘அருந்ததி’, ‘காஞ்சனா’, ‘சந்திரமுகி’ போன்ற படங்களுக்கு சவால்விடும் வகையில் திகிலாகவும், பிரமிப்பாகவும் இருக்குமாம்.

- ஒய்2கே