பூனம் பாஜ்வா! தமிழர்களின் புதிய கனவுக் கன்னி!



நடிகைகளைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இருவிதமான ரசனை உண்டு. மாடர்ன் லுக்கில் மனசை அள்ளும் ஹீரோயின்களை தங்கள் காதலியாக கற்பனையில் டூயட் பாடுவார்கள். சேலை, தாவணி, மல்லிகைப்பூ என்று ‘ஹோம்லி’யாக வெளிப்படுத்திக் கொள்ளும் ஹீரோயின்களோடு மனசுக்குள்ளாகவே வாழ்ந்து குழந்தை பெற்று, ஸ்கூல் அட்மிஷனுக்காக க்யூவில் நிற்பார்கள்.

கிளாமர் பாதி, ஹோம்லி மீதியாக வெளிப்படும் குஷ்பூக்களுக்கும், நயன்தாராக்களுக்கும் கோயிலே கட்டி வழிபட ஆரம்பித்து விடுவார்கள். தமிழ் இளைஞர்களின் latest goddess ஆக உருவெடுத்திருக்கிறார் இருபத்தேழு வயதான பூனம் பாஜ்வா.

சினிமாவுக்கு வந்து பதினோரு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு கேரக்டரில் கூட அவர் தமிழில் நடித்ததில்லை. ‘சேவல்’ படத்தில் அழுத்தமான பாத்திரத்தில் அறிமுகமாகி இருந்தாலும், வெற்றிவாய்ப்பை இழந்த அப்படத்தின் ஹீரோயின் என்பதால் ராசியில்லாதவர் என்று முத்திரை குத்தப்பட்டார். அடுத்தடுத்து அவர் நடித்த ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தெனாவட்டு’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ போன்ற படங்களும் வெற்றிப்படங்களின் பட்டியலில் இணையவில்லை.

பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்காமலேயே கனவுக்கன்னியாக உருவெடுத்திருக்கும் முதல் நடிகை அனேகமாக இவராகத்தான் இருக்க முடியும். பூனம் பாஜ்வாவின் ஃபேஸ்புக் பக்கத்தை போய் பார்த்தால் தினமும் லட்சக்கணக்கில் லைக்ஸ், பல்லாயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் & ஷேர் என்று அதகளப்படுகிறது. இத்தனைக்கும், “ஏமாறாதீங்க. எல்லாம் மேக்கப். அது இல்லைன்னா நான் அவ்வளவு அழகா எல்லாம் இருக்கமாட்டேன்” என்று உண்மையை போட்டு உடைக்கிறார் பூனம் பாஜ்வா.

பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தவர். அப்பா கடற்படை அதிகாரி. அம்மா ஹவுஸ் ஒய்ஃப். 2005ல் பூனம், ‘மிஸ் புனே’வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹைதராபாத்தில் ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துகொள்ள வந்தபோது குச்சுப்புடி வெங்கட் என்கிற தெலுங்கு இயக்குநர் ஒருவரின் கண்களில் மாட்டினார். “நவ்தீப்பை ஹீரோவாக்கி நான் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதமா?” என்று அவர் கேட்டார். +2 முடித்திருந்த பூனம், அடுத்து காலேஜில் சேர இன்னும் ஐந்து மாதங்கள் இடைவெளி இருந்தது.

 “இந்த இடைவெளிக்குள் படம் எடுத்து முடித்துவிட்டால், ஓக்கே” என்று விளையாட்டாகத்தான் சினிமாவுக்கு வந்தார். அதுவே தன்னுடைய முழுநேரத் தொழிலாக மாறப்போகிறது என்று அப்போது அவரே அறிந்திருக்க மாட்டார். அடுத்த படமும் நவ்தீப்புடன்தான் (தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் ஆர்யாவின் தம்பியாக நடித்தாரே, அவரேதான்) நடித்தார். மூன்றாவது படம் நாகார்ஜுனாவோடு. தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று படவாய்ப்புகள் குவிந்தன. இதற்கிடையே இலக்கியத்திலும் பட்டம் படித்தார் பூனம்.

தமிழில் இயக்குநர் ஹரி மூலமாகத்தான் ‘சேவல்’ படத்தில் அறிமுகமானார். அடுத்து அவர் நடித்த படங்களும் பெரியதாக ஓடவில்லை. எனினும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ‘மெட்ராஸ் டூ மதுரை’ ஐட்டம் சாங்குக்கு டூபீஸில் இவர் போட்ட கெட்ட ஆட்டம் ரசிகர்களை ஏகத்துக்கும் வெறியேற்றியது.

அடுத்து ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம்ரவியை வசியப்படுத்தும் Bold & Beautiful ரக கேரக்டரில் தகதகவென மின்னினார். மதமத உடல்வாகும், தந்தத்தை கடைந்தெடுத்தாற்போல வளைவுகளுமாக அப்படத்தில் அவர் வலம்வர, தமிழ் இளைஞர்களுக்கு போதை தலைக்கு ஏறியது. ‘அரண்மனை-2’ படத்தில் அம்சமான கவர்ச்சியோடு வளையவந்து குத்தாட்டம் போட பூரணமாக பூனம் வசமானது தமிழகம்.

இப்போது ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தின் வெற்றிக்கு அதன் காமெடி மட்டுமின்றி பூனம் பாஜ்வாவின் அளவான கிளாமரும் உதவியிருக்கிறது. நீளமான நாசி, வட்டமான முகம், ஈரமான உதடுகளில் எப்போதும் புன்னகை, கட்டழகான உடல் என்று தன்னுடைய ட்ரீம் கேர்ள் எப்படியிருக்க வேண்டுமென ஒவ்வொரு இளைஞனும் எதிர்பார்க்கிறானோ, அப்படித்தான் பூனம் இப்படத்தில் இருக்கிறார்.பூனத்தின் இந்த அசரடிக்கும் அழகின் ரகசியம் என்ன?“சிரிச்சிக்கிட்டே இருங்க. சந்தோஷமா இருங்க!”

பூனம் டேட்டா

பெயர் : பூனம் பாஜ்வா
ரியல் கேரக்டர் : ஜாலி டைப்
பிறந்த தேதி :
ஏப்ரல் 25, 1989.
உயரம் : 5.10 அடி
எடை : 55 கிலோ
(குத்துமதிப்பாக)
செருப்பு சைஸ் : 8
அழகு அளவுகள் : 34-27-34
பிடித்த நடிகர் : அஜித்
பிடித்த நடிகை :
ஜோதிகா, அனுஷ்கா
பிடித்த இயக்குநர் :
மணிரத்னம்

- யுவகிருஷ்ணா