அமர காவியம்



நண்பனின் காதலைச் சொல்ல மியாவிடம் தூது செல்லும் சத்யா, காதலனாக மாறுகிறார். நண்பன் அனந்த் நாக் விரோதியாகிறார். இடையூறுகளைக் கடந்து காதல் ஜெயித்ததா? காதலர்கள் இணைந்தார் களா? என்பதை விளக்குகிறது திரைக்கதை.ஆர்யாவின் தம்பி சத்யா, அண்ணனைப்போலவே குரல் கொடுத்து உடல்மொழி காட்டுகிறார். காதலைப் பொழியும்போதும், காதலிக் காக கண்ணீர் பொழியும்போதும் நடிப்பு வருகிறது.

அழகாகவும் இருந்து, நடிக்கவும் செய்யும் நாயகிகள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் மியா. துரோக நண்பனாக வரும் அனந்த் நாக், ஹீரோ வாய்ப்பு தேடினால் கிடைக்கும்.தம்பி ராமையாவும் இந்தப் படத்தில் வந்துபோகிறார். ஜிப்ரான் இசையில் மதன் கார்க்கியின் ‘சரிதானா... சரிதானா...’, பார்வதியின் ‘ஏதேதோ எண்ணம் வந்து..’ வெற்றிச்செல்வன் எழுதிய ‘மௌனம் பேசும்...’ பாடல்களை கேட்க லாம், பார்க்கலாம். இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் இருப்பதால், காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. ஜெயித்திருக்கிறார் ஜீவாசங்கர்.