குரல் His Mind Voice



வணக்கம் பாஸ்! நாந்தான் சரவணன் என்கிற சூர்யா பேசறேன். மார்க்கண்டேயன்னு சினி ஃபீல்டுல பேரெடுத்த எங்கப்பா எங்களையெல்லாம் ரொம்ப கண்டிப்பா வளத்தாரு. அதனால வேற வழியில்லாம நாங்களும் அவரப்போலவே சுத்தபத்தமா வாழ்க்கய ஓட்டவேண்டியதாயிடுச்சு.

நாங்க  சினி ஃபீல்டுக்கு வந்ததுக்கப்புறம் எந்த கிசுகிசுவிலயும் ‘மாட்டாம’ தப்பிச்சு நல்ல பேர தக்கவச்சுக்கிட்டு இருக்கோம். ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல, நாலு வருஷமா நானும் ஜோவும் லவ் பண்ணுனோம்.

அத ஸ்மெல் பண்ணுன மீடியாக்கள்ட்ட எல்லாம், இல்லைங்ற பொய்ய ஒரே மாதிரி சொன்னோம். அப்புறமா கல்யாணத்துக்கு மீடியாவ கூப்பிடும்போது கூச்சமாத்தான் இருந்துச்சு. ஆரம்பத்துல, ‘குள்ளமா இருக்கான், டான்ஸ் வேற வரலே’ன்னு ஆளாளுக்கு விமர்சனம் பண்ணுனாங்க. மொதல் மொதலா என்னோட ரூம்ல நான் ஒட்டிவச்ச சினிமா ஸ்டிக்கர் கமல் சாரோட ‘நாயகன்’ படம்தான். இன்னைக்கு நானும் அவர் லெவலுக்கு ‘மாற்றான்’, ‘ஏழாம் அறிவு’ன்னு பின்னிப் பெடல் எடுக்கலியா?

கேலியும் கிண்டலும் பண்ணுனவங்க இப்ப எங்க போய் மூஞ்சிய வச்சுக்குவாங்க? எதையுமே சேலஞ்சிங்கா எடுத்துக்கணும் பாஸ்! நியாயமா பாத்தா, நான் அனுஷ்காவ அண்ணாந்துதான் பாக்கணும். ஆனா, ஹைஹீல்ஸ போட்டுக்கிட்டு டூயட் பாடி அசத்தலையா? நேரம் நல்லா இருந்தா எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்.

இல்லேன்னா, கார்மென்ட்ஸ் கம்பெனில மாச சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த சரவணன் இப்போ சூர்யாவா ஆகி, ‘அகரம்’ அமைச்சு ஆயிரம் பேருக்கு உதவமுடியுமா? எங்கப்பாகிட்ட கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருக்கும்னு சத்யராஜ் சாரே சொல்லிருக்கார். நல்லவேளை எங்களுக்கு அப்பிடி அமையல.

நெல்பா