சாவி எங்கே?
சரோஜாதேவி பதில்கள்
ஏழு கழுதை வயசாகுது. இன்னும் வேலையே கிடைக்கலை சரோ... - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. சுயதொழில் செய்யலாமே சரா?
மன்மத பானம் எது? - த.சத்தியநாராயணன், அயன்புரம். முருங்கை ஜூஸ் என்று பாக்யராஜ் ரசிகர்கள் சொல்கிறார்கள்.
சடுகுடு ஆடிய அனுபவமுண்டா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. ஒரே ரைடில் ஆல்-அவுட் ஆக்கிய சாதனையும் உண்டு.
தாழ்ப்பாள் இல்லாத கதவு உண்டா? - கே.முருகன், திருவண்ணாமலை. சில கதவுகளுக்கு கண்ணுக்குத் தெரியாத பூட்டு உண்டு. அதைத் திறக்கும் சாவி, உங்க சாமர்த்தியம்.
கண்ணை நம்பாதே; உன்னை ஏமாற்றும் என்கிறார்களே? - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். உண்மையாகத்தான் இருக்கும்.
|