மாயவரத்தார்களின் நன்றி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

2020ஆம் ஆண்டு, மன்சூர் அலிகானின் ஆண்டாக அமைய வாழ்த்துகள். யாருமே எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது. இரவு என்று இருந்தால் விடியல் நிச்சயம் உண்டு.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அபிசரவணனின் ஆட்டோ அனுபவங்கள் அபாரம். சினிமாத்துறையில் நீடிக்க வேண்டுமானால் எத்தகைய கடுமையான உழைப்புக்கும் தயாராக இருக்க வேண்டும்.
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.

‘ஜீனியஸ்’ ரோஷனின் ‘டைட்டில்ஸ் டாக்’ யதார்த்தமாக இருந்தது. அவர் கொடுத்த அட்வைஸ்கள் சினிமாத்
துறைக்கு வர விரும்புபவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருக்குமானதாக அமைந்தது.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

கதைத் திருட்டுப் புகார்களுக்கு சூப்பர் ஸ்டாரின் லிங்கா, சட்டரீதியாக கடிவாளம் போட்டிருப்பது மகிழ்ச்சி.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

எங்கள் மயிலாடுதுறையைச் சார்ந்த மருத்துவர் திரு. அசோக் தியாகராஜன் அவர்கள் இயக்கிய ‘மாயநதி’ படத்துக்கு சிறப்பான விமர்சனம் எழுதிய ‘வண்ணத்திரை’க்கு மாயவரத்தார்களின் நன்றி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கண்ணுக்கு போதை, கருத்துக்கு தீனி என்று மானாவாரியாக வழங்கும் ‘வண்ணத்திரை’க்காக வழி மீது விழி வைத்து வாராவாரம் காத்திருக்கிறேன்.
- கவிஞர் நீலமலை ஜே.பி, உதகை-2.

நடுப்பக்க சோனி சிரிஷ்டாவுக்கு மனசுலே கனமுண்டு என்பதை நீங்க சொல்லித்தான் வாசக நெஞ்சங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவசியமில்லை. பார்த்தாலே தெரியுது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.