ப்ரியங்களுடன்...
 * வெறும் கைகளினாலேயே உருவாகும் தலையாட்டி பொம்மைகள் அத்தனை அழகு. இவை அனைத்தும் எத்தனை மனிதர்களின் உழைப்பு. படங்கள் பார்க்க பார்க்க பரவசம். - தேவஜோதி, மதுரை.
* நான் அவனில்லை ‘அருண்... அரவிந்த்’ டிவின்ஸ் பற்றி படங்களுடன் பார்த்ததும் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. உண்மையிலேயே ஒரு அதிசயமான தகவல்கள் தான். - பி.சரண், மானம்புச்சாவடி.
* நவராத்திரி துளிகள், நவராத்திரி சுபராத்திரி விளக்கங்கள் புதுமையாகவும் ஆன்மிக முறையாக கடைப்பிடிக்கவும் உதவியது. கிச்சன் டிப்ஸ் அனைத்தும் குறிப்பு எடுத்து வைக்கும் அளவுக்கு பிரமாதமாக உள்ளது. - ஜி.ராஜேஸ்வரி, திண்டிவனம்.
* ‘மைதானம்’ சிறுகதை வாசித்து முடித்த போது கண்களில் நீர் கசிந்தது நிஜம். நன்றி மறவா உணர்வுக்கு செங்குட்டுவன் உதாரணம். சமுதாயத்தின் மீது அதீத அக்கறை கொண்ட பத்ரகிரி தாத்தா தேசத்தின் நேச மனிதர். - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
* மைனாவதி எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் ஆரவல்லியும், மாலையிட்ட மங்கையும் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படங்கள். - செ.ரா.ரவி, நிலக்கோட்டை.
* 9 வயதில் 11 புத்தகங்கள் எழுதிய ஹர்ஷவர்தினி, அதற்கு ஓவியம் வரையும் வர்தினி.. சின்ன வயதில் இவர்களின் திறமை பாராட்டத்தக்கது. மருத்துவத்தை நேசிக்கும் மருத்துவர் அனுரத்னா அவர்களின் பல்நோக்கு சிந்தனைகள் செயல்பாடுகள் , அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை ஏற்பட செய்கிறது. - பிச்சை சுவாமிநாதன், தேதியூர்.
* அழகிய கோலப்படிகள் அந்நிய தேசத்திலும் விரும்பி வாங்கப்படுவதை விவரித்த கட்டுரை வியப்பு கலந்த பரவசத்தை அளித்தது. - அயன்புரம் த.சத்தியநாராயணன்.
* சமத்துவம் வரும் போது இவர்களுக்குமான சண்டைகள் குறையும் என்ற நிர்மலா கூறியது முற்றிலும் சரிதான். ெபண்களுக்கு சுயமரியாதை கற்றுக்கொடுத்தாலும் பல பெண்கள் வேறு ஒரு வீட்டிற்கு தானே போக போகிறோம் என்று நினைக்கிறார்கள். இது மாற வேண்டும். - வண்ணை கணேசன், சென்னை.
அட்டைப்படம் : பிரியங்கா அருள் மோகன், புகைப்படம் : கிரண்ஷா
|