ப்ரியங்களுடன்...
 பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதையும், அதற்கான காரணங்களையும் படித்தபோது நெஞ்சே அதிர்ச்சியில் உறைந்தது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைவிட, குறைப்பு விகிதம் மிகப்பெரிய கொடுமையாக உள்ளது என்பதைப் படித்தபோது நெஞ்சம் பதைபதைத்தது. - கீதா, சென்னை.
எங்கே என்னென்ன உணவு கிடைக்கும்? எப்படி அனுபவித்து சாப்பிட வேண்டும் போன்ற தகவல்களை காமெடி நடிகர் சாம்ஸ் விரல் நுனியில் வைத்திருப்பது ஆச்சரியப்படத்தக்கதாய் உள்ளது. தோழிக்காக சரியான தேர்வுதான் சாம்ஸ். - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.
நியூஸ் பைட்ஸ் என்ற தலைப்பில் தொகுத்தளிக்கப்பட்டிருந்த அனைத்து செய்திகளும் ரசனை மிக்கதாயிருந்தன. சம்பந்தப்பட்டவர்களைப்பற்றி ஒரு ‘கிளியர்’ ஐடியாவும் கிடைத்தது. - வி.கலைச்செல்வி வளையாபதி, கரூர். ‘ஏரோபிக்ஸ் செய்யலாம்... ஹெல்த்தியா இருக்கலாம்!’ என திடமாகக் கூறும் டாக்டர் ‘கோமதி’யின் கூற்றுக்கு நாமும் செவி கொடுப்போம். - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
தமிழ் பெண்கள் டி.வி. சீரியலுக்கு அழுபவர்கள் என்ற பிம்பம் உடைந்து, பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி என வித்தியாசமான கோணத்தில் சினிமா தரும் ஹலிதா ஷமிம், பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாக ஜொலிக்கிறார். - மல்லிகா அன்பழகன், சென்னை.
நடிப்பு என்பது தெரியாமல் அருவெறுப்பான முகத்தை கண்டு தீபிகாவை மக்கள் ஒதுக்கினார்கள் என்றால் அதுவே அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். `Chapaak’ படம் அவருடைய திரையுலக கேரியரில் மாஸ்டர் பீஸ் ஆக அமையும். பாராட்டுகள் தீபிகா. - அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.
நாவை அள்ளும் நற்சுவையில் மேற்கத்திய உணவுகள் இணைப்பு புத்தகம் சுவையோ அபாரம். பலனும், பயனும் பிரமாதம். - கவிதா சரவணன், திருச்சி.
நரிக்குறவர்களின் பாசிமணி மாலையை நவீனமாக்கி, இணைய விற்பனையையும் ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சேவைதான், உண்மையான சமூக முன்னேற்றப் பணியாகும். மனமார்ந்த பாராட்டுக்கள். - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
பாரம்பரியத்தை மீட்டெடுக்க மாற்றுத் திறனாளிகளுக்கான சமையல் கண்டேன். சற்று வித்தியாசமாக இருந்தாலும் விறுவிறுப்பாக இருந்தன. - பொன்னியம்மன் மேடு வண்ணை கணேசன், சென்னை.
வீட்டிற்கே வந்து சலவை செய்யப்படும் என்ற தலைப்பிலான தகவல்கள் புதுமையாகவும், அதே சமயம் பயனுள்ளதாகவும் இருந்தன. - வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.
தூங்கா நகரம் (மதுரை)தான் இட்லிக்கு பேர் போனது என நினைத்தேன், சைதாப்பேட்டை ‘வடகறி’யை மிஞ்சிவிட்டது அக்கா சரண்யாவின் இட்லி கடை! பலே! - சிம்மவாஹினி, சென்னை.
|