ப்ரியங்களுடன்



‘தன்னம்பிக்கையால் தலை நிமிர்ந்தேன்’... பேராசிரியர் டாக்டர் காயத்ரி அவர்களின் பேட்டி மிக அருமையாகவும், தடை கல்லையெல்லாம் படிக்கல்லாக கொண்டு முன்னேறிய திறமையும் மிகவும் பாராட்டுக்குரியது.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

திருமலைராயன் பட்டினம் ஆயிரம் காளியைப் பற்றிய விசேஷமான வியக்க வைக்கும் செய்திகளைப் படித்ததும் மெய்சிலிர்த்தது.
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை.

ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்தின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருப்பினும் அதை அரசியலாக்காமல் அவரது உலக, ஒலிம்பிக் போட்டி கனவு மெய்ப்பட வேண்டுமென்பதே நம் எல்லோரது விருப்பம்.
- மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக மிக இளம் வயதிலேயே பயிற்சி மேற்கொள்ளும்  ‘கோதை ’யின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்! ‘ஹன்சா’ மக்களின் நீண்ட ஆயுட்காலம், இளமை இவற்றின் ரகசியம் மிகச்சிறப்பு.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

வரலாற்று நாயகியாக சாதனை புரிந்துள்ள மணிப்பூர் ஐரோம் ஷர்மிளா வீராங்கனையாக மட்டுமல்லாமல் இரட்டைக்குழந்தைகளுக்கான தாயாகவும் சாதித்து இருப்பது வாழ்த்தப்பட வேண்டிய சாதனைதான்.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

வரலாற்று சிறப்பு வாய்ந்தது மக்களவையில் 78 பெண் எம்.பிக்கள். பல பெண்கள் தனிப்பட்ட முறையில் சாதித்து விட்டார்கள். இவர்களும் பல சாதனைகள் புரிய ேவண்டும். அப்போதுதான் உலகம் இவர்களை தலை நிமிர்ந்து பார்க்கும்.
- பொன்னியம்மன் மேடு வண்ணை கணேசன், சென்னை.

ஆன்-லைனில் பாடம் படிக்கலாம் ஆப்ஸ்கள் அனைத்துமே பயனுள்ள கல்விவள வழிகாட்டுதலாய் படிக்கும் மாணவ மணிகளுக்கு பலன்மிகு உத்வேகமளித்தது. இசையின் இதமான இனிமை ஸ்வரங்களால் அதை மாண்புற ரசித்து நேசித்து கலையை கௌரவிக்கும் வீணை இசை வித்தகி - பாணி ஹாட்ஸ் ஆப்.
- கவிதா சரவணன், திருச்சி.

சாதனையாளர் டி.பி.குமுதினி குறித்து அறியப்படாத அரிய தகவல்களை பா.ஜீவசுந்தரி அவர்கள் வழங்கி, ஆணாதிக்க உலகில் அவர்கள் புகழ், சாதனை எளிதில் மறைந்துவிடுகிறது என ஆதங்கப்பட்டிருப்பது நிஜமே!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

சுவையான சாதங்கள் 30, பழைய பல இருந்தாலும் சில புதிய கலவையில் சாதங்கள் ருசியூட்டின. 30 நாட்களுக்கும் 30 வகை, வகையான கலவை சாதங்களை தயாரித்து உண்டு, சுவைத்து மகிழச் சிறந்த கையேடு என்பதில் ஐயமில்லை.
- ஆர்.கீதா, திருவான்மியூர்.