அன்னா பர்ன்ஸ்



இலக்கியத்துக்கான தலை சிறந்த பரிசுகளில் ஒன்றான ‘புக்கர்’ பரிசை வென்றுள்ளார் அயர்லாந்தைச் சேர்ந்த அன்னா பர்ன்ஸ். ஒரு பெண் இந்தப் பரிசை வென்றிருப்பது அயர்லாந்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.கடுமையான முதுகுவலிக்கும், நரம்பு வலிக்கும் இடையில் அவர் எழுதிய  ‘மில்க்மேன்’ நாவலுக்கு, 2018-ம் ஆண்டுக்கான ‘மான் புக்கர்’ பரிசு கிடைத்திருக்கிறது.

வடக்கு அயர்லாந்தில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். ‘புக்கர்’ பரிசை வெல்லும்வரைக்கும் இவரைப் பற்றிய எந்த தகவலும் அவ்வளவாக வெளியே வரவில்லை என்பது ஆச்சர்யம். பரிசாகக் கிடைத்த 50 ஆயிரம் பவுண்டும் அறுவை சிகிச்சைக்கும், வாடகை பாக்கிக்குமே போதுமானதாக இருந்திருக்கிறது.

‘‘என் உடல்நிலை சரியானால் மட்டுமே தொடர்ந்து எழுதுவேன். அதுவரைக்கும் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன்...’’ என்று சென்ற வாரம் ‘தி கார்டியன்’ பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் அன்னா.மீண்டு வாருங்கள் அன்னா.