Mini முத்தாரம்



இந்த வருடத்துக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் படம் ‘ரோமா’. திரையரங்கத்தில் ரிலீஸ் செய்யாமல் ‘நெட்பிலிக்ஸி’ல் இப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஸ்பானிஷ் மொழிப் படமான ‘ரோமா’வின் இயக்குனர் அல்ஃபோன்ஸோ குரானின் சிறு நேர்காணல் இது.

‘ரோமா’வை நெட்பிலிக்ஸில் வெளியிட காரணம்?

ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிப் படங்கள் அதிகமான மக்களைச் சென்றடைவதில்லை. தற்போது இந்தக் குறையை ‘நெட்பிலிக்ஸ்’ தீர்த்துவைக்கிறது. அத்துடன் தியேட்டர் வசூலைவிட அதிகமான மக்கள் ‘ரோமா’வைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.  இதற்கு சரியான பாதை நெட் பிலிக்ஸ் தான். நான் நினைத்ததை விட நெட்பிலிக்ஸ் நிறுவனர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். அதற்கு என் நன்றிகள்.
‘ரோமா’வைப் பற்றி...

இதுதான் என் முதல் படம். நான் சொல்ல நினைத்ததை எந்தவித தடையுமில்லாமல் முழுமையாக ‘ரோமா’வில் பதிவு செய்திருக்கிறேன். இப்படத்தின் 90 சதவீத காட்சிகளை என் நினைவிலிருந்து எடுத்திருக்கிறேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை வடிவமைத்த, மெக்சிகோவை வடிவமைத்த தருணங்களைப் படமாக்கியிருக்கிறேன். முக்கியமாக என் வாழ்க்கையில் நான் அதிகமாக நேசித்த நபரான லிபோவைப் பற்றியது இப்படம்.