3டி ஸ்மார்ட் ஜெல்!



அமெரிக்காவிலுள்ள ரட்ஜெர்ஸ் பொறியியல் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 4டி பிரிண்டிங் முறையை ஸ்மார்ட் ஜெல் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளனர். ஸ்மார்ட் ஜெல்லைப் பயன்படுத்தி 3டி முறையில் பொருளை உருவாக்கி  அதன் உருவத்தை  மாற்றிக்கொள்ள முடியும்.  கான்டாக்ட் லென்ஸ்,  டயப்பர் ஆகியவற்றிலுள்ள  ஹைட்ரோஜெல்லைப் போன்றது தான் இந்த  பிரிண்டிங் முறைக்கு  பயன்படுத்தும்
வேதிப்பொருட் களும்.

 “ஸ்மார்ட் ஜெல்லை  இதுபோல ஆய்வுகளுக்கு  பயன் படுத்துவது யாரும் யோசிக்காத கோணம். நெகிழ்வான, உருவம் மாறும் இயல்பு கொண்ட ஸ்மார்ட் மெட்டீரியல் இது” என்கிறார் ஆராய்ச்சியாளர் லீ. 32 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு  அதிகமாகும்போது, ஜெல்லின் நீர் வெளித்தள்ளப்பட்டு சுருங்குகிறது. “ஜெல்லின் உருவத்தை சரியாக வைத்திருந்தால் நீங்கள் அதன் செயல்பாடு பற்றி யோசிக்க முடியும். ஸ்மார்ட் ஜெல்லின் பிளஸ் பாய்ன்ட்டும் அதுதான்” என்கிறார் லீ.