வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

நிறுவனம்: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எனும் தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக் கழகம்
வேலை: அசிஸ்டென்ட் எஞ்சினியர் மற்றும் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: மொத்த இடங்கள் 123. இதில் முதல் வேலையில் 23 மற்றும் இரண்டாவது வேலையில் 100 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு எஞ்சினியர் படிப்பும், இரண்டாவது வேலைக்கு முதுகலைப் பட்டப்படிப்பும் அவசியம்
வயது வரம்பு: தமிழக அரசு வரைமுறைகளுக்கு உட்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.tncsc.gov.in

CISF-ல் ஹெட் கான்ஸ்டபிள் பணி!

நிறுவனம்: துணைராணுவப் படையின் ஒரு
பிரிவான CISF எனப்படும் மத்திய
தொழிற்சாலை பாதுகாப்பு படை
வேலை: ஹெட் கான்ஸ்டபிள்(ஜெனரல் டியூட்டி). ஆண், பெண் இருபாலாரும் பங்கு பெறலாம். விளையாட்டுத் துறையில் மாநிலம், தேசிய மற்றும் உலகளவில் போட்டியிட்டவர்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள்: மொத்தம் 300
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 23 வரை
தேர்வு முறை: விளையாட்டுத் திறன் சோதனை, மருத்துவ சோதனை மற்றும் இன்னும் பிற தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.cisfrectt.in

திருச்சி NIT-ல் உதவிப் பேராசிரியர் பணி

நிறுவனம்: திருச்சியில் உள்ள NIT என்று சொல்லப்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்பக் கழகம்
வேலை: பல்வேறு துறைகளில் உதவிப் பேராசியர் பணி(கிரேட் II)
காலியிடங்கள்: மொத்தம் 147
கல்வித் தகுதி: எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி.,
பி.எஸ்சி., எம்.இ. மற்றும் எம்.டெக் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 35க்குள். பிற்படுத்தப்பட்டவர்
களுக்கு வயதில் தளர்வளிக்கப்படும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.nitt.edu.in

பட்டதாரிகளுக்கு விமான ஆணையத்தில் வேலை!

நிறுவனம்: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா(AAI) எனும் மத்திய அரசின் விமான ஆணையத்தில் நாட்டின் பல்வேறு கிளைகளில் வேலை
வேலை: மல்டிடாஸ்கர் மற்றும் செக்யூரிட்டி ஸ்கீரினர் எனும் இருபிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 702. இதில் முதல் வேலையில் 283 மற்றும் இரண்டாவது வேலையில் 419 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு 10வது படிப்புடன் மேலும் சில தகுதிகளும், இரண் டாவது வேலைக்குப் பட்டப்படிப்புடன் மேலும் சில தகுதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன
வயது வரம்பு: 45க்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.12.19
மேலதிக தகவல்களுக்கு: https://www.aai.aero

அணு உலை ஆராய்ச்சி நிலையத்தில் செக்யூரிட்டி கார்டு பணி!

நிறுவனம்: மும்பையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மத்திய அரசின் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் எனும் அணு உலை ஆராய்சி மையத்தில் வேலை
வேலை: செக்யூரிட்டி கார்டு மற்றும் அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் என இருபிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 92. இதில் முதல் வேலையில் 73 இரண்டாம் வேலையில் 19 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு 10வது படிப்பும் இரண்டாம் வேலைக்கு டிகிரியும் அவசியம்
வயது வரம்பு: 18 முதல் 27 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் திறன் தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.12.19
மேலதிக தகவல்களுக்கு: http://www.barc.gov.in

இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்!

நிறுவனம்: இந்திய ராணுவத்துக்கு நாகப்பட்டினத்தில் நேரடி ஆட்சேர்ப்பு (ஆர்மி ரெக்ரூட்மென்ட் ரேலி) மூலம் ஆட்சேர்ப்பு. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
வேலை: சோல்ஜெர் எனும் படைவீரர் பிரிவில் டெக்னிக்கல், ஜெனரல் டியூட்டி மற்றும் டிரேட்ஸ்மேன் எனும் 3 பிரிவுகளில் வேலை
கல்வித் தகுதி: டெக்னிக்கலுக்கு +2 தேர்ச்சியும், ஜெனரல் டியூட்டிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், டிரேட்ஸ்மேன் வேலைக்கு 8வது படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 17.5 முதல் 23 வரை
தேர்வு முறை: உடல் அளவுகள், ஓட்டப்பந்தயம் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்