ரயில்வேயில் 1412 பணியிடங்கள் வேலைக்கு நீங்கள் தயாரா?



இந்தியாவின் அரசுத் துறை நிறுவனங்களில் மிகப் பெரியது ரயில்வே துறை. மிக அதிகமானவர்களுக்கு பலதரப்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இது விளங்குகிறது. தற்போது இந்திய ரயில்வேயில் ஸ்டெனோகிராபர், ஜூனியர் ட்ரான்ஸ்லேட்டர், ஸ்டாஃப் அண்டு வெல்ஃபேர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 1412 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

               Name of the Post                                                                         No. of Vacancies
1.Stenographer (Hindi)                                                           Post    376    
2.    Junior Stenographer (English) Post    599    
3.    Chief Law Assistant Post    43    
4.    Junior Translator (Hindi) Post    82    
5.    Staff - Welfare Inspector Post    56    
6.    Librarian Post    2    
7.    Library Information Assistant Post    4    
8.    Catering Inspector (Commercial) Post    60    
9.    Catering Inspector
    (Commercial) Gr. III Post    49    
10     Commercial - Head Cook Post    17    
11.    Horticulture Supervisor -
    Inspector Post    8    
12.    Field Man (Horticulture) Post    1    
13.    Publicity Inspector Post    4    
14.    Senior Publicity Inspector Post    3    
15.    Finger Print Examiner Post    6    
16.    Photographer Post    1    
17.    Scientific Supervisor Economics -
    Training Post    2    
18. Scientific Supervisor (Psycho) Post    2    
19.    Scientific Assistant Grade I
    Training Post    1    
20.    Artist (Psycho) Post    1    
21.    Lab Assistant III (Workshop) Post    12    
22.    Trained Graduate Teacher
    (English) Post    2    
23.    Trained Graduate Teacher
    (Science) Post    1    
24.    Primary Teacher (PRT) Post    10    
25.    Assistant Mistress Post    1    
26.    Assistant Master (PGT) Post    1    
27.    Assistant Master (PGT)
    History Female Post    1    
28.    Teacher Grade I (Biology) Post    1    
29.    Teacher Grade II (English) Post    1    
30.    Teacher Grade II , Math
    (English Medium) Post    1    
31.    Teacher Grade I
    (Physical Training Instructor) Post    3    
32.    Teacher Grade IV English Post    4    
33.    Teacher Grade IV Science
    English Medium Post    4    
34.    Teacher Grade IV, Math
    (English Medium) Post    5    
35.    Teacher Grade IV History
    (English Medium) Post    3    
36.Teacher Grade IV Economics
    (English Medium) Post    2    
37. Teacher Grade IV Commerce
    (English Medium) Post    3    
38. Teacher Grade IV Tamil Language
    (English Medium) Post    2    
39.    Primary Teacher PRT Post    29    
40.    Post Graduate Teacher Post    1    
41.    Craft Teacher Post    1    
42.    Music Teacher Post    1    
43.    Post Graduate Teacher
    (Physics) Post    1    
44.    Post Graduate Teacher
    (History) Post    1    
45.    Trained Graduate Teacher
    (Arts) Post    1    
46.    Physical Training Instructor Post    1    
47.    Post Graduate Teacher
    (Chemistry) Post    1    
48.    Teacher Grade IV
    (Malayalam Language) Post    1
    
வயது வரம்பு:

ஒவ்வொரு பணியிடத்திற்கும் வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏராளமான பணிகள் காத்திருக் கின்றன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 1-1-2015 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித் தகுதி:

ஸ்டெனோகிராபர் (இந்தி) பணியிடத்துக்கு இந்தி மொழி தெரிந்திருப்பதோடு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் இந்தி சுருக்கெழுத்தை நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் எழுத வேண்டியது அவசியம்.

ஜூனியர் ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இது தவிர மற்ற பணியிடங்கள் அனைத்துக்கும் அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதியை இணையத்தில் பார்க்கலாம்.

கட்டண விவரம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படை வீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் நெகட்டிவ் மார்க் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது, தவறாக பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 1/3 மதிப்பெண் வீதம், பெறும் மொத்த மதிப்பெண்களிலிருந்து குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரயில்வே ஆட்தேர்வு ஆணைய (www.rrbchennai.gov.in) இணையத்திற்குச் சென்று தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கான அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.11.2014. விண்ணப்பித்த பின்னர் அனைத்து சான்றிதழ் நகல்களையும் சாதாரண அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 11.01.2015 தேர்வுக்கான அனுமதி அட்டை/ஹால் டிக்கெட்

15 நாட்களுக்கு முன்பாகவே அனுப்பி வைக்கப்படும். அப்படி இவை வந்து சேராவிட்டால் ஸிஸிஙியின் indianrailways.gov.in என்ற இணைய
தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தெற்கு மண்டல ரயில்வே விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை அனுப்பவும், விரிவான விவரங்களைப் பார்க்கவும் www.rrbchennai.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.