+2 ஆங்கிலம் இரண்டாம் தாள் சென்டம் வாங்க டிப்ஸ்



+2 ஆங்கிலம் இரண்டாம் தாளில் முழு மதிப்பெண் பெறும் வழிமுறைகள் பற்றி கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில், ஆங்கிலம் இரண்டாம் தாளை எளிமையாகப் புரிந்து கொண்டு எழுதும் வழிமுறைகள், திட்டமிட்டு படிப்பது பற்றி விரிவாக விளக்குகிறார் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆங்கில ஆசிரியர் ணி.இளங்கோவன்.  
 
‘‘ஆங்கிலம் முதல் தாளைவிட இரண்டாம் தாள் மிகவும் எளிமையானது. வினாக்களின் தன்மையைப் புரிந்துகொண்டு திட்டமிட்டுப் படித்தால் உறுதியாக முழு மதிப்பெண்களையும் பெற்று விடலாம். தேர்வில் கேட்கப்படும் வினாக்களை ஒரு முறைக்கு இருமுறை கவனமாக வாசிக்க வேண்டும்.  விடையளிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை: கவினாக்களை அமைதியாகப் படித்தல் வேண்டும். கவினாவைப் புரிந்து கொள்ள வேண்டும்.கமுறைப்படி விடையளிக்க வேண்டும்.

ஏனெனில் இரண்டாம் தாளைப் பொறுத்தவரை 1 முதல் 12 வரையுள்ள வினாக்கள்   supplementary Reader   பகுதியில் இருந்து கேட்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 25 மதிப்பெண்கள். இதில் 1 முதல் 11 வரையிலான வினாக்களுக்கு விடை எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

Supplementary Reader-ல் உள்ள ஏழு கதைகளையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கதையிலும் இடம் பெறும் கதாபாத்திரங்களின் பங்கு, கதையின் போக்கு, இடம் பெறும் சம்பவங்கள், குறியீடுகள்,   objects, story sequence,   முக்கிய நிகழ்வுகளை மனதில் இருத்திக் கொண்டாலே 1 முதல் 12 வரையிலான கேள்விகளுக்கு எளிதாக விடை எழுதி 25 மதிப்பெண்களைப் பெற்று விடலாம்.

1வது வினாவைப் பொறுத்தவரையில் மொத்தம் 6 வாக்கியங்கள் வரிசையாகக் கொடுக்கப் பட்டிருக்கும். முதல் மற்றும் கடைசி வாக்கியத்தைத் தவிர்த்து மற்ற 4 வாக்கியங்கள் இடம் மாறியிருக்கும். (மொத்தமுள்ள ஏழு கதைகளில் ஏதேனும் ஒரு கதையின் சுருக்கம்). எனவே கதையின் Track--ஐ நினைவில் இருத்திக்கொண்டாலே சரியான sequence-ல் எளிதாக பதில் எழுதி விடலாம். மேலும் இதை paragraph ஆக எழுத வேண்டும்.

2 முதல் 6 வரையிலான 5 வினாக்கள் objective type-ல் கேட்கப்படும். மொத்தமுள்ள 7 கதைகளையும் படித்தாலே போதும், இந்த வினாக்களுக்கு எளிமையாக விடையளித்து முழு மதிப்பெண்களையும் பெற்று விடலாம்.7 முதல் 11 வரை உள்ள 5 வினாக்களுக்கு விடை எழுதும்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள passage-ஐ நன்றாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த passage-ம் கதைப் பகுதியிலிருந்தே கேட்கப்படுகிறது.

12வது கேள்வி, essay type question, 10 மதிப்பெண் வினா. இந்த வினாவில் மொத்தமுள்ள 7 கதைகளிலிருந்து ஏதேனும் இரண்டு கதைகளின் ‘பிவீஸீt‘ கொடுக்கப்பட்டிருக்கும். முதல் இரண்டு கதைகளிலிருந்து நிச்சயம் ஒரு கதையின் ‘Hint‘ கேட்கப்படும். எனவே முதல் இரண்டு கதைக்கான essayவை படித்தாலே போதும். விடை எழுதும்போது synopsis, Introduction, subtitles, conclusion  இட்டு எழுத வேண்டும்.

13 முதல் 17 வரையிலான 5 இரண்டு மதிப்பெண் வினாக்கள் (  Section 'B' Learning competency).  Different section  in a modern library, cliche, travelogue, eponymous words, euphemism, classification of  books, EMail ID for any two organisations, Arranging author names, why do we  consult a dictionary?, what is Thesaurus?, skimming and scanning, steps to be followed while  summarising, Note making, OPAC, General instructions for using the library, How do you  search a book in the library?   போன்ற வினாக்களைப் படித்தாலே போதும், இந்தப் பகுதியில் எல்லா வினாக்களுக்கும் விடை எழுதி விடலாம்.

18 முதல் 22 வரையிலான வினாக்கள் ‘Spot the Errors‘. கடந்த பொதுத் தேர்வுகளின் வினா வங்கியை ஒன்றுக்கு இரண்டு முறை   work out  செய்தாலே   இவ்வினாக்களுக்கு எளிமையாக விடை எழுதிவிடலாம். Use of singular/plural, use of articles,  simple,  compound, complex, concord, Agreement with the verb Degrees, conditional clause  Grammar  பகுதியில் இருந்து பரவலாக ஏற்படும் Errors (common Errors)இன் தன்மை மற்றும் வகைகளை previous question papers -ä work out  செய்வதன் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

23வது கேள்வி summary writting, ஐந்து மதிப்பெண் வினா. இதற்கு விடை எழுதும்போது Rough draft, suitable title,  Fair draft Format-இல் எழுத வேண்டும். ‘Summary writing‘ எழுதும்போது கொடுக்கப் பட்டுள்ள passage-ஐ நன்றாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். Main points-ä identify செய்து வரிசையாக எழுதவும். Main points-ä Rough  Draft-ஐ எழுதவும். பின் Fair draft-ஐ prepare செய்து எழுதவும். பொருத்தமான தலைப்பு கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள passage-ல்  1/3-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

24-வது கேள்வி ‘Responding to the Advertisement, 10 மதிப்பெண் வினா. Presentation சரியாக இருந்தால் 10 மதிப்பெண்களையும் பெற்று விடலாம். இந்த வினாவிற்கு From, To  Salutation, Subject, Reference, Body of the  letter, BioData, Address on the cover என்ற Format-ல் எழுத வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள Advertisement-ஐ நன்றாகப் படிக்கவும். Advertisement-ன் தேவை, முகவரி உள்ளிட்டவற்றைக் குறித்துக்கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள Format-ல் பதில் எழுதவும்.

25-வது கேள்வி Nonlexical fillers  hum, Er, uh, oh  போன்றவற்றை சரியான இடத்தில் இட்டு எழுத வேண்டும். எளிமையான வினா இது.

26-வது வினா Road map, Instructions.  கொடுக்கப்பட்டுள்ள Road Map-ஐ பார்த்து மூன்று Instruction கொடுக்க வேண்டும்.  (example: Go Straight, Turn your right side and proceed, you can find the bank opposite  to the Bus stand).  மிகவும் எளிதாக 3 மதிப்பெண் பெறக்கூடிய வினா இது.

27 முதல் 31 வரை ‘Proverb Meaning‘. கொடுக்கப்பட்டுள்ள proverb-க்கு இணையான Meaning-ஐ தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். கடந்த பொதுத்தேர்வுகளின் வினா வங்கியைப் படித்தாலே போதும்.  

32 முதல் 36 வரை ‘Product slogan‘.  இதற்கும் கடந்த பொதுத்தேர்வுகளின் வினா வங்கியை refer  செய்தாலே போதும். 5 மதிப்பெண்களை எளிதாகப் பெற்று விடலாம்.

இறுதியாக 37 முதல் 38 வரையிலான General Essay questions. 3 வினாக்களுள் ஏதேனும் ஒன்றுக்கு விடை எழுத வேண்டும். General Essay-க்கு விடை எழுதும்போது பிழையில்லாமல், synopsis, introduction, sub titles, questions  relevant to the given topic, conclusion - இந்த Format-ல் எழுத வேண்டும்.
திட்டமிட்டுப் படித்தால் சென்டம் நிச்சயம். வாழ்த்துக்கள்!

மாடல் : நிவேதா
படம் : புதூர் சரவணன்