தத்துவம் மச்சி தத்துவம்




எல்லா ரைஸையும் கடையில வாங்கலாம்... ஆனா, சர்ப்ரைஸை வாங்க முடியுமா?
- கொண்டை ஊசியால் மண்டையை குத்திக்கொள்(ல்)வோர் சங்கம்
- சி.சாமிநாதன், கோயம்புத்தூர்.

என்னதான் கணக்காசிரியரா இருந்தாலும், அவரால காலத்தை கழிக்கத்தான் முடியுமே
தவிர கூட்ட முடியாது!
- குழப்பமான சிந்தனைகளுடன் காலத்தைக் கழிப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

‘‘சாகப் போறப்ப பேஷன்ட்
என்கிட்ட ஒரு
சத்தியம் வாங்கிட்டார்...’’
‘‘என்ன சத்தியம் டாக்டர்?’’
‘‘இனி நான் யாருக்கும்
ஆபரேஷன் செய்யக் கூடாதாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

இன்னிக்கு லாங் ஷாட் எடுக்கணும்னு கேமராமேன்கிட்டே சொல்லிட்டியா..?’’
‘‘சொல்லிட்டேன் சார். அவர் வீட்ல இருந்தே ஷூட் பண்றாராம்... அதான் ஸ்பாட்டுக்கு வரலை!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘ஆபரேஷனுக்கு ஒத்துக்க பேஷன்ட் என்ன கண்டிஷன் போடுறார்..?’’
‘‘நர்ஸ் கத்தியை எடுத்துக் கொடுத்து ஆபரேஷனை ஆரம்பிச்சு வைக்கணுமாம்..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘தலைவர் ரொம்ப மோசமா... ஏன் அப்படிச் சொல்றே?’’
‘‘திடீர்னு சம்பந்தமே இல்லாம எத்தியோப்பியாவில் உள்ள ஒரு கட்சிக்குத் தாவியிருக்காரே!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘அடிக்கடி பெருமூச்சு வருது
டாக்டர்...’’
‘‘ஓகே!
உங்களை
நர்ஸ்
இல்லாத
வார்டுல
அட்மிட்
பண்றேன்...’’
- அம்பை தேவா, சென்னை-116.