ஜோக்ஸ்



தலைவரோட பேரன் காலேஜ்ல கலாட்டா செய்யறானாமே... என்ன விஷயம்?’’
‘‘அவனை காலேஜ்ல ‘மாணவர்களின் முதல்வர்’னு அறிவிக்கணுமாம்..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

ஸ்பீக்கரு...

‘‘வாழ்த்த வயதில்லை என்கிறீர்கள்... புகழ வார்த்தைகள் இல்லை என்றீர்கள்... இவ்வளவு நேரம் பேசுகிறேனே... எனக்கு கொடுக்க ஒரு சோடா கூடவா இல்லை?’’
பர்வீன் யூனுஸ், சென்னை-44.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் வாழ்க்கை ஒரு ‘சக்கரம்’னாலும், அது பழுதானா அதுக்கு ஸ்டெப்னி எல்லாம் மாற்ற முடியாது!
- மனைவிக்கு மாற்றாக சின்ன வீட்டை ஸ்டெப்னியாக வைத்துக்கொள்வோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

தலைவரை பிடிக்கவே முடியலையே... ‘வாட்ஸ் அப்’ல இருக்காரோ?’’
‘‘நல்லா வருது. அவரே ‘லாக்கப்’ல இருக்காரு!’’
- கா.பசும்பொன், மதுரை.

‘‘திருடின உடனே ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறே..?’’
‘‘ஒருநாள் லேட்டானால் மாமூலுக்கு வட்டி
கேட்கறாங்களே!’’
- அம்பை தேவா, சென்னை-116.

நீங்க ‘ஐ’ டெஸ்ட்டுக்கு ரெடியா?’’
‘‘சாரி டாக்டர்... அந்தப் படத்தை பார்க்காம என்னால எந்த கொஸ்டீனுக்கும் ஆன்சர் பண்ண முடியாது!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

தலைவர் தொகுதிக்குப் போனபோது செருப்படி விழுந்ததாமே... ஏன்?’’
‘‘ரொம்ப நாள் கழிச்சு தொகுதிக்குப் போனதால, உணர்ச்சிவசப்பட்டு பெண்களை
கட்டிப் பிடிச்சு முத்தப் போராட்டம் நடத்தினாராம்!’’
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.