நாள்



நம்ம வீட்டு மாடி போர்ஷன் ஒரு மாசமா காலியா இருக்கு. இப்போ அந்தப் பொண்ணு வந்து பார்த்து ‘வீடு பிடிச்சிருக்கு’ன்னு சொல்லுச்சு. ‘நாளைக்கு வந்து பால் காய்ச்சலாமா’ன்னு கேட்டதுக்கு, ‘இனிமே, மார்கழி முடிஞ்சு தை வந்தாதான் புது இடத்துக்குக் குடியேறணும்’னு சொல்லி அனுப்பிட்டியாமே! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’’ - தேவியின் கணவர் தேவனாதன் அவளைக் கடிந்தார்.

‘‘விஷயம் அது இல்லீங்க. அந்தப் பொண்ணு புதுசா கல்யாணமாகி, புகுந்த வீட்டுக்கு வந்து பத்து நாள்தான் ஆகுதாம். அதுக்குள்ள மாமியாரோட மனஸ்தாபப்பட்டு, தனிக்குடித்தனத்துக்கு முயற்சி பண்றாங்க. பத்து நாள்ல யாரைப் பத்தி என்ன புரிஞ்சுக்க முடியும்? இன்னும் ஒரு மாசம் சேர்ந்து இருந்தாங்கன்னா, அவங்க ராசியாகி ஒண்ணாவே இருந்துட வாய்ப்பு இருக்கு. நமக்கு கல்யாணமான புதுசுல நானும் இது மாதிரி அவசரப்பட நினைச்சிருக்கேன்...

பொறுமையா இருந்ததாலதான் உங்க அம்மாவைப் புரிஞ்சுக்கிட்டேன். அப்படி ஒரு வாய்ப்பை அந்தப் பொண்ணுக்கும் தரணும்னுதான் ஒரு மாசத்துக்கு நாள் நல்லா இல்லைன்னு பொய் சொன்னேன். நம்ம வீட்டுக்கு ஆயிரம் டெனன்ட் வருவாங்க. ஒரு குடும்பம் சந்தோஷமா வாழுறது அதைவிட முக்கியம் இல்லையா?’’தேவியின் விளக்கத்தில் பிரமித்து நின்றார் தேவன்.         

எஸ்.ராமன்