
*தொலைபேசியை எடுத்தால்
நீ
பேச வேண்டியதுதானே
எதற்காக பல்லியைப்
பேச விடுகிறாய்
*இடையூறு
செய்யாதீர்கள்
மூடுபனிக்குள்
தொலைந்திருக்கின்றன
குருவிகள்
*எதுவும் குற்றமில்லை
அந்த நொடிக்கு
அதுதான் சரி
எழுந்து வேண்டுமானால்
சோம்பல் முறித்துக்கொள்
*ஒத்துழைப்பிற்கு நன்றிடா
இதோ
அதன் தொடர்ச்சியாகத்தான்
கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
புல்லாங்குழல்
இசை
*வெள்ளம் வடிந்த பிறகுதான்
ஓடத்தொடங்குகிறது
ஆறுதெளிவாக
*நசுங்கத் தூங்க வைத்துப்
பெருமூச்சுவிடுகிறவனுக்குத்தான்
வாய்க்கும்அந்தப்பெருமிதம்
அறிவுமதி