தொழிலதிபர் தேவராஜ் தனது தொழிற்சாலையில் பணிபுரிய ஆட்களை நியமனம் செய்திருந்தார். அனைவருக்கும் ஒரே வேலை என்றாலும் ஊதியத்தில் வித்தியாசம் இருந்தது. குறைவாக ஊதியம் பெற்றுக்கொண்டவர்களில் பாதிப் பேர் வேலையை விட்டு நின்று கொண்டார்கள். மூன்று மாதம் கழிந்திருந்தது.

ஒவ்வொருவரும் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை விசாரித்தார் தேவராஜ். ‘‘அஞ்சு பேர் மட்டும் புலம்பிக்கிட்டே இருக்காங்க சார். ‘ஒரே வேலையைத்தான் எல்லாரும் செய்யறோம்.
அவங்களுக்கு அதிக சம்பளம், எங்களுக்குக் குறைச்சல். இது என்ன நியாயம்’னு கேக்கறாங்க. மீதி எட்டுப் பேர் சம்பளம் குறைவுன்னு சொல்றதே இல்லை. அவங்க பாட்டுக்கு வேலைய செய்யறாங்க..!’’ - தான் உணர்ந்ததை ஒளிக்காமல் மறைக்காமல் சொன்னார் மேற்பார்வையாளர்.
‘‘புலம்பற அந்த அஞ்சு பேரும் அவங்க உழைப்பை நம்பாம அடுத்தவங்களோட தங்களை ஒப்பிட்டு சம்பளம் குறைவுன்னு மனசுக்குள்ள புழுங்கி வேலையில ஆர்வம் காட்டி
யிருக்க மாட்டாங்க. அவங்களைத் தூக்கிடுங்க. எட்டு பேருக்கு சம்பளத்தை ஏத்துறதோட மூணு மாச அரியரையும் சேர்த்துக் குடுத்திடுங்க..!’’ வேலையில் ஆர்வம் காட்டும் தொழிலாளர்களை கண்டுபிடிக்கவே ஊதிய வேறுபாட்டை நிர்ணயித்த தனது முதலாளியின் புத்திசாலித்தனத்தை மனதுக்குள் மெச்சினார் மேற்பார்வையாளர்.
ஐரேனிபுரம் பால்ராசய்யா