கிரிக்கெட் பேட் கார்!
புதுப்புது கார்களைக் கண்டுபிடித்து அசத்தும் ஒரு மியூசியம், சுதா கார் மியூசியம். ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்த மியூசியத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புதான், கிரிக்கெட் பேட் கார். 21 அடி நீளமுள்ள கிரிக்கெட் பேட்டில் எஞ்சின் உட்பட கார்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பொருத்தி, ஃபார்முலா ஒன் காரின் இன்ஸ்பிரேஷனில் கிரிக்கெட் பேட் காரை வடிவமைத்திருக்கிறது இந்த மியூசியம்.
பெட்ரோல் டேங்க், இண்டிகேட்டர்ஸ், முன் மற்றும் பின் விளக்குகள் என ஆச்சர்யப்படுத்தும் இந்த கார் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.மியூசியத்துக்கு வரும் பார்வையாளர்களைக் கவர்வதற்காக இந்த காரை காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.
மியூசியத்தைத் தாண்டி வெளியில் இந்த கார் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மியூசியத்தில் கிரிக்கெட் பந்து வடிவிலான காரும் இருக்கிறது. கிரிக்கெட் பேட் காரைப் பற்றி இன்ஸ்டாவில் ஒரு வீடியோவைத் தட்டிவிட, ஆயிரக்கணக்கானோர் மியூசியத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
த.சக்திவேல்
|