சிரஞ்சீவிக்கு வில்லனாக கார்த்தி?



தலைப்பு உணர்த்தும் பொருள், இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், விரைவில் இந்தக் காம்பினேஷன் பட்டையைக் கிளப்பும் என ஆரூடங்கள் சொல்கின்றன. தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அறிமுகம் தேவையில்லை. 
அதேபோல் நம் கார்த்திக்கும் இன்ட்ரோ தேவையில்லை.ஏற்கனவே தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனாவுடன் இணைந்து ‘தோழா’ படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். தவிர டோலிவுட் எனப்படும் ஆந்திராவில் கார்த்திக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ‘வால்டர் வீரய்யா’ உட்பட பல படங்களை இயக்கிய பாபி கொல்லி, சிரஞ்சீவி + கார்த்தி இணைந்து நடிப்பது போல் ஒரு கதையை ரெடி செய்து அதை சம்பந்தப்பட்ட இருவரிடமும் சொல்லி ஒப்புதல் வாங்கியிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன.இதுவரை இச்செய்தியை இருவரும் மறுக்கவில்லை. 

எனவே சிரஞ்சீவியும் கார்த்தியும் சேர்ந்து நடிப்பது 100% உறுதியாகியுள்ளது என்கிறது பான் இந்திய வட்டாரம்.ஆனால், சிரஞ்சீவிக்கு வில்லனாக கார்த்தி நடிக்கப் போகிறார் என்று பரவும் நியூஸ் மட்டும் 99% உறுதியாகவில்லை.எஞ்சிய ஒரு சதவிகிதம் ‘ஆம்’ என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறது.பார்க்கலாம் வதந்தியா அல்லது நிஜமா என்று. 

காம்ஸ் பாப்பா