மம்மூட்டியை மிரட்டியவர் தமிழில் லவ் மேரேஜ் செய்கிறார்!
‘நந்திதா / கார்த்திக்’ இந்த பெயரை அவ்வளவு சீக்கிரம் மலையாள சினிமா ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அப்படி அதிர்ச்சி கொடுத்த கதாபாத்திரம் இந்த கார்த்திக் / நந்திதா கதாபாத்திரம்.
கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘டோமினிக் அண்ட் த லேடிஸ் பர்ஸ்’ படத்தில் கதைக் கருவே இந்த கதாபாத்திரம்தான்.  அதை அவ்வளவு நேர்த்தியாக நடித்திருப்பார் சுஷ்மிதா பட். குறிப்பாக இவர் ஆடிய ‘மார்கழி திங்கள்...’ நடனம் அடடே ரகம். அப்படி ஓர் அழகுக்குள் இப்படி ஓர் ஆபத்தா என நினைக்க வைத்த சுஷ்மிதா, தற்போது அப்படியே வேறு ஒரு சேஞ்ஜ் ஓவரில் லைட் வெயிட் கேர்ள் நெக்ஸ்ட் டோர் கதாபாத்திரத்தில் ‘லவ் மேரேஜ்’ கொடுக்கத் தயாராக இருக்கிறார்.  வெல்கம் டூ தமிழ் சினிமா..!
ஆக்ச்சுவலி ‘டோமினிக் அண்ட் த லேடிஸ் பர்ஸ்’ படத்துக்கு முன்பே இந்தப் படம் முடிச்சிட்டோம். என்னுடைய மூன்றாவது படமா ‘லவ் மேரேஜ்’ வெளியாகி இருக்கணும்.  ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு. ஆனாலும் ‘டோமினிக் அண்ட் த லேடிஸ் பர்ஸ்’ படத்திற்கு அப்புறம் இந்தப் படம் வெளியாகும் போது எனக்கான அங்கீகாரம் இன்னும் ஸ்ட்ராங்கா கிடைச்சிருக்கு. நிறைய பேர் என்னை நந்திதாவாகத்தான் அடையாளப் படுத்தறாங்க.  கிளாசிக்கல் நடனத்தில் பெரிய ஆள் போலவே நீங்க..?
சின்ன வயதிலிருந்து கிளாசிக்கல் நடனம் கத்துக்கிறேன். அதுதான் எனக்கு நடிப்பிலும் முகபாவனைகள், உணர்வுகளை வெளிப்படுத்த உதவுது. மேலும் நந்தினி கதாபாத்திரம் கூட அப்படித்தான் எனக்கு அமைந்தது. என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் சமீரா மூலமாகத்தான் மம்மூட்டி சார் கூட நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  முதலில் வரும் பொழுது மம்மூட்டி சார் படம் அப்படின்னு மட்டும்தான் எனக்குத் தெரியும். அடுத்து கௌதம் மேனன் சார் இயக்கம்... தொடர்ந்து கதை என் மேலேதான் பயணிக்குது அப்படின்னு தெரிஞ்ச பிறகு என்னுடைய சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அப்படி கிடைத்த வாய்ப்பு. என்னுடைய கரியர் மைல்ஸ்டோன்னு சொல்லுவேன். உங்களைப் பற்றி சொல்லுங்க..?
பக்கா ஆர்த்தோடாக்ஸ் ஸ்ட்ரிக்ட் ஃபேமிலி. அப்பா கோபாலகிருஷ்ணன் பட், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கிளர்க்காக இருக்கார். அம்மா சாந்தி பட், ஹவுஸ் வைஃப்.
சொந்த ஊர் கர்நாடகா உடுப்பி.
இப்போ பெங்களூரு. நான் படிச்சது சாப்ட்வேர் இன்ஜினியரிங். படிச்சு முடிச்சபிறகு ஏதாவது ஒரு ஐடி கம்பெனியில் நல்ல சம்பளம்... வேலை... இப்படிதான் உட்காரணும்னு அம்மாவும் அப்பாவும் முடிவு செய்திருந்தாங்க. இப்போ வரைக்கும் அவங்க எதிர்பார்ப்பு அதுதான். சினிமா ஆசையை சொன்னதும் கிட்டத்தட்ட அடிக்காத குறைதான். நிறைய எதிர்ப்புகள் இருந்துச்சு. எங்க வீட்டில் யாரும் சினிமாவில் கிடையாது. பேக்ரவுண்ட் வேற இல்லாம சினிமால வேலையா... அப்படின்னு ரொம்ப பயந்தாங்க. இப்பவும் அந்த பயம் இருக்கு. மம்முட்டி சார் படம் அந்த பயத்தை கொஞ்சம் மாத்தி இருக்கும்னு நம்பறேன்.
‘லவ் மேரேஜ்’..?
ஒரு குறிப்பிட்ட வயசுல கல்யாணம் நடக்காமல் தள்ளிப் போனாலே சுத்தி இருக்கிறவங்க கேட்கிற கேள்வி இருக்கே... ஹையோ... இப்போ எனக்கே அது நடக்குது.
சொந்தக்காரங்க வீட்டு ஃபங்ஷனுக்கு எங்கே போனாலும் எப்போ கல்யாணம் என்கிற கேள்வியைத்தான் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கு. அதிலும் இந்த 90ஸ் கிட்ஸா இருந்து இன்னமும் கல்யாணம் ஆகாம இருக்கும் ஒரு பையன் நிலைமை எப்படியிருக்கும்... அதுதான் ‘லவ் மேரேஜ்’.
டைரக்டர் சண்முகப் பிரியன்... அவருடைய விஷன் நல்லா இருந்துச்சு. குறிப்பா என்னுடைய கேரக்டரை ஆழமா டிசைன் செய்திருக்கார். இப்போ இருக்க ஜெனரேஷன்க்கு ஏத்த மாதிரி கதை எழுதறார்.விக்ரம் பிரபு... அவருடைய குடும்பப் பின்னணிக்கு, வேறு யாராவது இருந்தால் அவ்வளவு பந்தா காட்டுவாங்க.
ஆனா, அவர்கிட்ட அதைப் பார்க்கவே முடியாது. இப்பவும் முதல் படம் மாதிரியே, ஷாட் ரெடி அப்படின்னு சொன்னதும் சின்சியரா தயாராகி நிற்பார். என்ன... அவங்க வீட்டில் இருந்து வரும் சாப்பாடு அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்னு சொல்லுவாங்க. அதுதான் எனக்கு மிஸ் ஆகிடுச்சு. மம்மூட்டி கூட நடிக்கும்போது கற்றுக் கொண்டது என்ன?
டெடிகேஷன், சின்சியாரிட்டி. இவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ்... இத்தனை படங்கள் கடந்தும் இன்னமும் அந்த சின்சியர் அவர்கிட்ட குறையவே இல்ல. எனக்குத்தான் அவர் முன்னாடி நடிக்க அவ்வளவு பயமா இருந்தது.
ஆனா, ரொம்ப சீக்கிரம் உங்களை கம்ஃபோர்ட் ஜோனுக்கு கொண்டு வந்துடுவார். பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால், அது நமக்குதான். அவர் தலையில் அந்த பாரத்தை ஏத்திக்கவே மாட்டார். எல்லார்கிட்டயும் அவ்வளவு பணிவா, ஃப்ரெண்ட்லியா இருப்பார். எவ்வளவு உயரம் போனாலும் இந்தக் குணத்தை விட்டுட கூடாதுன்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். கன்னடம், மலையாளம், இப்போ தமிழ்... அடுத்த திட்டம் என்ன ?
நல்ல நடிகை என்கிற பெயர் எந்த மொழியில் கிடைச்சா என்ன! அதற்கான ஓட்டம்தான் இது. கன்னடத்தில் இரண்டு படங்கள் (‘சௌ சௌ பாத்’, ‘கல்ஜிகா’). அங்கதான் அறிமுகமானேன். தொடர்ந்து வந்த வாய்ப்புதான் தமிழ்ல ‘லவ் மேரேஜ்’.திடீர்னு மலையாளப் படங்கள் மேலே ஒரு ஆர்வம் வந்தது. அதற்கேத்த மாதிரியே மம்மூட்டி சார் படமும் அமைஞ்சது. நிறைய மொழிகள் கத்துக்க பிடிக்கும். கன்னடம் தெரிஞ்சா தெலுங்கு சுலபம்; தமிழ் தெரிஞ்சா மலையாளம் சுலபம் அப்படின்னு நினைச்சேன்.
ஆனா, என் நினைப்பு பொய்யாயிடுச்சு. கொஞ்சம் கஷ்ட மாதான் இருக்கு. ஆனாலும் எப்படியாவது முயற்சி செய்து எல்லா மொழியையும் கத்துக்கிட்டு நானே டப்பிங் செய்து நடிக்கணும் என்கிறதுதான் என்னுடைய ஆசை.
உங்க அடுத்தடுத்த படங்கள்..?
தமிழில்தான் ரெண்டு மூன்று ப்ராஜெக்ட் பேசிக்கிட்டு இருக்காங்க. மலையாளத்தில் கதை கேட்டுகிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் அறிவிப்பு வரும்.
ஷாலினி நியூட்டன்
|