எனக்கு தங்கச்சி பிறந்திருக்கா!
இப்படி குதூகலமாகச் சொல்பவர் மலையாள நடிகையான ஆர்யா பார்வதி. 23 வயதான இவருக்கு சமீபத்தில் தங்கை பிறந்திருக்கிறார்!‘‘எங்கம்மாவுக்கு வயசு 47. தான், கர்ப்பமானது தெரிஞ்சதும் எங்கம்மா சங்கடப்பட்டாங்க. அப்ப நான் லீவுக்காக வெளியூர்ல இருந்தேன். அப்பாதான் போன் செய்து தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னார்.
 எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. 23 வயசு பொண்ணுகிட்ட சொல்லக் கூடிய விஷயமில்ல. அதனால அம்மாவும் அப்பாவும் ரொம்ப சங்கடப்படறாங்கனு புரிஞ்சுது. ஆனா, நான் சட்டுனு சமாளிச்சு அவங்களுக்கு போன்ல வாழ்த்து சொன்னேன்...” என்கிறார் ஆர்யா பார்வதி.அதன்பின் வீடு திரும்பியவர் தன் அம்மாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். கர்ப்பமாக இருக்கும் மகளை கவனமாய் பார்த்துக் கொள்ளும் தாயைப் போல் கர்ப்பமாய் இருந்த அம்மாவை கனிவோடு கவனித்தார்.
இப்போது அழகான பெண் குழந்தைக்கு அக்காவாகி இருக்கிறார் ஆர்யா பார்வதி.‘‘என் முதுகுக்கு பின்னாடி சிலர் கேலி, கிண்டல் பண்றாங்கனு தெரியும். ஆனா, நான் கவலைப்படலை. என் தங்கச்சியை நல்லா வளர்ப்பேன்...’’ உற்சாகத்துடன் சொல்கிறார்.
காம்ஸ் பாப்பா
|