சிரிங்க பாஸ்



*பொ.பாலாஜிகணேஷ்

‘‘டாக்டர், எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு...’’‘‘கொஞ்சம் பொறுங்க... புதுசா ஏதாவது டெஸ்ட் வந்திருக்கான்னு பார்த்து சொல்றேன்!’’

‘‘மன்னர் தன் செல்போனை பார்த்து ஏன் துள்ளித் துள்ளிக் குதிக்கிறார்..?‘‘மன்னரின் முகநூல் பக்கத்தில் எதிரி மன்னர் ஆட்டின் போட்டிருக்கிறாராம்!’’

‘‘டாக்டர், நான் எப்படி பிழைச்சேன்..?’’‘‘அதைத்தான் நானும் கேட்கறேன்... நீங்க எப்படி பிழைச்சிங்க..?’’

‘‘ஏம்பா சர்வர்... அது என்ன முகநூல் உப்புமா?’’‘‘நீலக் கலர்ல இருக்கறதால அந்தப் பேரு சார்!’’ ‘‘தலைவரே... நம்ம கட்சில தட்கால்ல பதவி ஏதாவது இருக்கா?’’

‘‘மன்னர் வாட்ஸ் அப்பில் இருக்கிறாரா..?’’‘‘தற்சமயம் பயத்தில் பதுங்கு குழியில் இருக்கிறார்..!’’

‘‘அவசியம் கல்யாணத்துக்கு வந்துடுங்க...’’‘‘மண்டபத்துல இலவச வைஃபை வசதி இருக்குதானே..?!’’

‘‘டாக்டர், நான் வாந்தி எடுக்கறேன்...’’‘‘எப்படி?’’‘‘எப்படி எடுக்கிறேன்னு வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டிருக்கேன். பாருங்க!’’  

‘‘நான் உண்மைலயே அதிர்ஷ்டக்காரன் டாக்டர்... சிகிச்சைல பேங்க் பேலன்ஸ் மட்டும்தான் போச்சு... அசையா சொத்தெல்லாம் அப்படியே இருக்கு!’’