அஞ்சு பன்ச் - த்ரிஷா



உலகமே கிறிஸ்துமஸ், நியூ இயர்னு உற்சாகமாக இருக்கும்போது த்ரிஷா உலகம் சுற்றிக்கொண்டு இருப்பார். ஒவ்வொரு புது வருஷமும் அவருக்கு வெளிநாட்டில்தான் புலரும்.

பார்க்கத்தான் ஆள் அமைதி. உண்மையில் பயங்கர வாலு. சர்ச் பார்க்கில் படிக்கும்போது யூனிஃபார்மில் மரத்தில் தலைகீழாக தொங்கிய ஒரே பெண் இவர்தான்!

பத்தாவது படிக்கும்போதே மிஸ்.சென்னை! போதாதா... நடிகையாகி விட்டார்.

சிட்னி, ரம்யா கிருஷ்ணன், தனுஷ், ஹேமா, அகிலா, நிருபமா, வினி என நண்பர்கள் பட்டியல் நீளம். நண்பர்களுக்காக உயிரை விடுகிற கேரக்டர்.

ஃபேஷன் விவரங்களில் அப்டேட் ஆக இருப்பவர். ஃபேவரைட், வெஸ்டர்ன் டிரெஸ். சின்னக்கழுத்துக்கு எப்பவும் மெல்லிய சங்கிலிதான்.

நன்மதி