பொறாமை சுனாமி!
விளம்பரத்துறையில் தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் காட்டும் லதா மேனன் ரியலிஸ்டிக் சூப்பர் லேடி! - எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; லக்ஷித், மடிப்பாக்கம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நரசிம்மராஜ், மதுரை.
ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு வெற்றிமுரசு கொட்டும் காலா பற்றிய பா.ரஞ்சித்தின் தகவல்களும் ஸ்டில்களும் தூள்! - மூர்த்தி, பெங்களூரு; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மயிலைகோபி, அசோக்நகர்;ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
 நீரைக் கெடுத்து நிலத்தில் வாழ முடியாது என்பதை திருப்பூர் தொழில்துறையினர் உணர்ந்து திருந்துவதே சீரழிந்த நொய்யல் ஆற்றை உயிர்ப்பிக்கும் ஒரே தீர்வு. - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; பூதலிங்கம், நாகர்கோவில்; முருகேசன், கங்களாஞ்சேரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; வளையாபதி, தோட்டக்குறிச்சி.
வீட்டுத்தோட்டம் அமைப்பதை தன் சொற்கள் மூலம் அழகுபடுத்தி அக்கறையாக சொல்லியுள்ளார் ‘ஹோம் அக்ரி’ மன்னர்மன்னன். - முத்துவேல், கருப்பூர்.
குட்டியூண்டு உடையில் சம்மர் வெகேஷனைக் கொண்டாடிய ஹீரோயின்களைப் பார்த்ததும் நெஞ்சில் பொறாமை சுனாமி! - வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; முருகேசன், கங்களாஞ்சேரி.
எழுத்துச்சித்தரின் உயிர் பிரிந்த இறுதிக் கணத்தை எழுத்தில் வடித்த சூர்யா பாலகுமாரனின் எழுத்தில் தந்தையின் மகத்துவம் மிளிர்ந்தது. - வி.ஆர்.நடராசன், திருமுல்லைவாயில்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
பார்சல் கொடுக்காமல் நேரில் வரவைத்து வயிறு நிறைய சோறு போடும் காரைக்குடி பிரியா மெஸ், அதன் மெனு ஐட்டங்களை விட குறிக்கோளில் அசத்திவிட்டது. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
தன் 75வது பிறந்தநாளில் இசையைத் தொடர்வேன் என இளையராஜா கூறியது ராஜாங்க புத்துணர்ச்சி. - ஆனந்திராஜா, மணப்பாறை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
சென்னை நகருக்கு மேற்கத்திய கம்பீரம் தரும் மூன்று ஹால்களைப் பற்றி விரிவான தலபுராணம், பொக்கிஷம். - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ரணகள அனுபவத்தை ரசித்துச் சிரிக்க வைத்திருந்தார் எஸ்.ராமன். - எம்.கதிர்வேல், கோவை.
அபூர்வமான ஆயிரம் ரேடியோக்களைச் சேகரித்து வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் ராஜா ஸ்டானிஷ். - த.சத்தியநாராயணன், அயன்புரம்; மூர்த்தி, பெங்களூரு; முத்துவேல், கருப்பூர்; பிரேமாபாபு, சென்னை; முருகேசன், கங்களாஞ்சேரி; ஜனனிகார்த்திகா, திருவண்ணாமலை.
முகப்பவுடரில் புற்றுநோய் வருமா? பீதி தரும் கேள்வியோடு தொடங்கி வியர்வை சுரப்பிகளை வேலை செய்யாமல் தடுக்கும் அதன் பக்கவிளைவுகளை சொல்லி எச்சரித்தது சம்மருக்கு ஏற்ற அட்வைஸ். - அக்ஷயாகீர்த்திகா, திருவண்ணாமலை; ஜானகிரங்கநாதன், சென்னை; முருகேசன், கங்களாஞ்சேரி.
-ரீடர்ஸ் வாய்ஸ்
|