டாக்டர்களுக்கு அபராதம்!



புனேவிலுள்ள ஆயுதப்படை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இளங்கலையை விட்டு விலகினால் ரூ.25 லட்சமும்,  முதுகலைப்படிப்பை விட்டு விலகினால் ரூ.28 லட்சமும் அரசுக்கு அபராதம் கட்டவேண்டும் என்ற நிபந்தனையை நாடாளுமன்றக்குழு  மாற்றியமைத்துள்ளது.

இதன்படி மாணவர்கள் இனி 1 - 2 கோடி வரை அபராதம் கொடுக்கும்படி விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ராணுவ மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெறும்  மருத்துவர்கள் 20 ஆண்டுகள் வரை அங்கு பணியாற்றவேண்டும் என்பது விதி. படிப்பு முடிந்தவுடன் 20% பேர் டிமிக்கி கொடுத்து வெளியேறி தனியார்  மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுவதால் இந்த நடவடிக்கை. ஆண்டுக்கு 130 மருத்துவர்கள் ராணுவ மருத்துவக்கல்லூரிக்குத் தேர்வாகி படித்து  வருகிறார்கள்.  

ரோனி