காவிமயமாகும் தியாகிகள்!இந்திய சுதந்திரத்துக்காக சாதி, மதம் பார்க்காமல் உழைத்தவர்களை இன்று மதச்சாயம் பூசி அவமானப்படுத்தி வருகிறது இனவாதக்குழு. அப்படி  ஒன்றுதான் அண்மையில் பத்திரிகையாளர் நரேந்திர சேகல் எழுதியுள்ள புத்தகமும்.

சுதந்திரப் போராட்ட வீரர் ராஜகுரு, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என சேகல் எழுதியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாண்டர்ஸை கொலை செய்துவிட்டு ஆர்எஸ்எஸ்ஸின் தலைமையகமான நாக்பூருக்கு ராஜகுரு வருகை தந்ததாகவும், அவர் தங்க இடமளித்து  ஹெட்கேவர் உதவியதாகவும் இப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சேகல். ‘‘இது வரலாற்றைத் திரிக்கும் பலவீனமான முயற்சி...’’ என்கிறார் அறிவியல்  மற்றும் அரசியல் வரலாற்றுப் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப்.  

ரோனி