இவங்க நம்ம ஆளுங்க!



தன்னோடு தொடர்பு எல்லையில் உள்ளவர்களையும், கடந்து போனவர்களையும் மனோபாலா தொடரில் கொண்டு வந்து வாசகர்களை வியக்க வைக்கிறார்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘வணிகம் வளர்க்கும் வாட்ஸ்அப்!’ தலைப்பு மட்டுமல்ல, தகவலும் வித்தியாசமானது. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செய்யும் கார்த்திக்... ஹேட்ஸ் ஆஃப் டூ யூ!
- மயிலை கோபி, சென்னை-83.



தமிழில் செம அடக்கமாக நடித்து வந்த காஜல்... இந்திப் படத்தில் ‘லிப் டு லிப்’ கிஸ் அடிப்பது போங்கு! அஞ்சு நிமிஷம் அடுத்த பக்கத்தை புரட்ட மனசே வரலை பிரதர்!
- ஜெ.வி.டேவிட் ராஜா, சேலம்.

‘நாணயங்களில் மறைந்திருக்கும் வரலாறு’ பலே! நேற்றைய வரலாற்றின் எச்சங்களை நாணயங்கள் மூலம் தேடி எடுத்திருக்கும் அந்த நல்ல மனிதருக்கு பாராட்டுக்கள்!
- எம்.பர்வீன் பார்த்திமா, திண்டுக்கல்-2.

ஒரு பக்கம் நயன்தாரா, இன்னொரு பக்கம் ஆண்ட்ரியா... சிம்பு வெரி லக்கி. ஆமா, அதில் எது அவர் ‘ஆளு’? பேசாம, ‘இவங்க நம்ம ஆளுங்க’ என டைட்டில் வச்சிருக்கலாமோ!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

போதி மரத்தருகே நின்றதும் புத்தகயா கோபுரங்களைப் பூரண நிலவொளியில் கண்டதும்... ஆஹா! அவற்றை எங்கள் மனதிலும் பதிவிறக்கம் செய்துவிட்டார் ஜெயமோகன்!
- சிவமைந்தன், சென்னை-78.

தமிழர்களின் பரம்பரைச் சொத்து ‘திருக்குறள்’. நம் சந்ததிகள் அதைப் படிக்க நீதிமன்றம் நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது வெட்கக்கேடு!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

‘செக்ஸியஸ்ட் வுமன்’ என்று அமெரிக்க நடிகை ஸ்கேர்லட் ஜோகன்சனை தனுஷ் சொன்னது மிகச் சரி என்பதை அருகில் இருந்த ஸ்டில்கள் வழி அறிந்தோம். நன்றி!
- எம்.சந்திரமோகன், புதுச்சேரி.

‘ஜெர்மனியின் செந்தன் மலரே’ எனப் பாடத் தோன்றியது  ‘விநோத ரஸ மஞ்சரி’ பகுதியில் வந்த கவர்ச்சி  போலீஸைப் பார்த்ததும்!
- இ.இளையகுமாரன், கொளத்தூர்.