வலைப்பேச்சு



‘‘அம்மா நான் பாசாயிட்டேன்...’’ என்பதற்கே பூரித்த பெற்றோர்கள் இந்த யுகத்திலும் இருக்கிறார்களா?
- ஷான் கருப்பசாமி

ரெண்டு கொசுவத்திய தனித்தனியா பிரிக்கிறதுக்கு நான் படுற பாடு இருக்கே... ஸ்ஸப்பா! எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தானை எல்லாம் பிரிச்சாங்களோ!
-  கரண்ட் வில்லன்



@Bubbly_Girl__
சந்தோஷத்துல பெரிய சந்தோஷம், அடுத்தவன் சந்தோஷமா இல்லன்னு கேட்கறப்ப வர்ற சந்தோஷம்தாங்க!
# இந்தக் காலத்துப் பழமொழி

@shelrosster 
பதவி வரிசைப்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன - ஜெயலலிதா
# இவங்க எந்தப் பதவில இருக்காங்க ஆபீசர்!

@writerpara 
மிஸ்டு கால் கொடுத்து பாஜகவில் சேர்ந்தோர் எத்தனை லட்சம் பேர்? அவர்கள் அனைவரும் ஓட்டுப் போட்டார்களா? பர்சன்டேஜ் உதைக்கிறதே?

* பயாலஜி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா உயிரணுவாம்...
* ஃபிசிக்ஸ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா பேட்டரியாம்...
* இங்கிலீஷ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா விற்பனையாம்...
* ஹிஸ்டரி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ஜெயிலாம்...
* தமிழ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ‘போ’ன்னு அர்த்தமாம்!
# அஞ்சு பீரியட்லயும்  இப்படி குழப்படி நடந்தா, பசங்க எப்படி உருப்படுவாங்க???

பார்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா நட்பு. பீச்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா காதல். கோயில்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா பக்தி! சுண்டல் நிலையானது...
- வினோத் சேனா

@paramporul 
புரோட்டோகால், புரோட்டா மாஸ்டர் பத்திலாம் பேசறவங்க கவனத்துக்கு: சட்டசபையில சபாநாயகர் இருக்கையிலேயே சசிகலாவ உக்கார வச்சவங்கதான் மம்மி.

படுக்கையிலே பூ இருந்தால் வாழ்க்கை துவங்குகிறது என்று அர்த்தம்; படத்திலே பூ இருந்தால் வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம்!
கழுத்திலே பூ இருந்தால் வேட்பாளர் என்று அர்த்தம்; காதிலே பூ இருந்தால் வாக்காளர் என்று அர்த்தம்!

‏@kumarfaculty 
இங்கு ‘நல்ல’ என்பது, அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் குறிக்கிறது!

@Kozhiyaar 
‘‘யோசித்து சொல்கிறேன்’’ என்ற பதில், ‘முடியாது’ என்பதன் நாகரிக வெளிப்பாடுதான்!

எல்லா சமையல் நிகழ்ச்சியையும் பார்த்துட்டு கடைசியில் உப்புமா செய்யும் மனைவியைப் போலத்தான் மாற்றத்தை விரும்பும் மக்களும்!
- என் எஸ்
வேல் ராஜன்

@haranprasanna 
விஜய்காந்தை தோற்கடித்த மக்களுக்கு கடும் தண்டனை. அவர் சினிமாவில் நடிக்கிறாராம்!

@Arun_Pangali
விலை இருக்குதோ இல்லையோ, விளைச்சல் நல்லா இருக்கணும்னுதான் எல்லா விவசாயியும் நெனைக்கறான். காசு வேணும்னு நெனச்சிருந்தா கஞ்சாவதானே போட்ருப்பாங்க!

‘பதவியேற்பு விழாவிற்கு திமுகவிற்கு அழைப்பு அனுப்பியது, ஜெயலலிதாவின் பெரிய மனது’ என்கிற ரேஞ்சுக்கு சில படித்த அறிவாளிகளும் தம் கட்டி கூவுகிறார்கள். பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு அனுப்புவது மரபு. ஏற்கனவேகூட திமுகவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டு, ஸ்டாலின் கலந்து கொண்டார். 2011ல் அந்த மரபு மீறப்பட்டபோது, எந்த அறிவாளியும் அது குறித்துப் பேசவில்லை.

2006ல் திமுக பதவியேற்புக்கு ஜெயலலிதாவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டும், கலந்து கொள்ளாத ஜெயலலிதாதான் பெரிய மனது கொண்டவராம். 2002 மற்றும் 2016 பதவியேற்பில் கலந்து கொண்ட ஸ்டாலினை விட, அழைப்பு அனுப்பிய ஜெயலலிதாவே பெரிய மனது கொண்டவராம்...
# ஈயம் பூசுற டெக்னிக்கே இவனுக கண்டுபிடிச்சதுதான் போல!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

கோபம், சோகம், அழுகை, பிடிவாதம் எல்லாவற்றையும் 5 ரூபாய் சாக்லெட்டில் மறந்து விடுகின்றன குழந்தைகள். ஏனோ நம்மால் முடியவில்லை‬!
- விஜய் சாரதி

‘‘ஸ்டேட் பேங்க் சிம்பள் பாத்திருக்கீங்களா..?’’
‘‘ஓ... பாத்திருக்கேனே! ரவுண்டா நடுவுல சின்னதா ஒரு சாவித்துவாரம் இருக்குமே... அதுதானே?’’
‘‘நீங்க சொன்ன அடையாளம் கரெக்ட்டுதான்! ஆனா அது சின்ன சாவித்துவாரம் இல்ல, கண்டெய்னர் லாரியே ஈசியா போற துவாரம்..!’’
- பொம்மையா முருகன்

அனுமதிக்கப்படும் அளவிற்கான தவறுகளும் குற்றங்களுமே ‘நெளிவு சுளிவு’ என வகைப்படுத்தப்படுகிறது!
- பி கதிர்வேலு

குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதில் புட்டிப்பால் புகட்டுவதில் ஆரம்பிக்கிறது முதல் நம்பிக்கைத் துரோகம்...
- மோனிக்

இலையில சோறு போடறவரைக்கும் கூட்டுல கை வைக்காமல் இருப்பவன்தான் உண்மையான பொறுமைசாலி!
- செல்வா டியர்

அம்மா பதவி ஏற்றதால் உலக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் - மதுரை ஆதீனம்
# அம்மா பதவி ஏத்ததுக்கு அமெரிக்காக்காரன் எதுக்கு மகிழ்ச்சி அடையப் போறான்? கூவறதுல எப்பவுமே இவர் மட்டும் வித்தியாசமா கூவுவாரு!
- இளையராஜா அனந்தராமன்

நாட்டுல வறுமைய ஒழிக்கிறதுலாம் பெரிய விஷயமில்லை... ஆனா உண்மையான ஏழைகளைக் கண்டுபிடிக்கிறதுதான் பெரிய சவால்! ரேஷன் கார்டுல‬ பார்த்தா அம்பானிகூட மாசம் தவறாம ரேஷன்ல அரிசி வாங்கியிருப்பார்... நம்ம ஊரு டிசைன் அப்டி!
- விவிகா சுரேஷ்

காலையில் பதவி ஏற்பு விழா... ரோசய்யா டீ குடிக்கிறதுக்குள்ள மறுபடியும் மாலையில் அமைச்சரவை மாற்றம்... கவர்னர் டபுள் ஷிஃப்ட் பாக்குற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

ஜெயலலிதா மாறிட்டாங்களாம்! இதுக்கு முன் அன்பழகனை கடைசி இருக்கையில் உட்கார வச்சுட்டு, மறுநாள் குடுத்த அறிக்கையை ஸ்டாலின் பேரை டிங்கரிங் பண்ணி ரீ-ரிலீஸ் பண்ணி இருக்காங்க!
# இதைத் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு...
- எழிலன் எம்

@thoatta 
இத்தனை நாளா நைட் 12 வரை ஷட்டருக்கு அடில, ஜன்னல் வழில சரக்கு வாங்குனாங்க. இப்ப பகல் 12 மணி வரை வாங்கணும், அம்புட்டுதான்!

@donrithik 
எலெக்‌ஷனுக்கு  முன்னாடி கண்டெயினர்னு ஒண்ணு இருந்ததாகவும்... மக்கள் அதைப் பார்த்ததாகவும் பேசிக்கிட்டாங்க!

@Iam_SuMu 
அடப்பாவிகளா, முதல் நாளே தமிழக அமைச்சரவை விரிவாக்கமாம். 4 புதிய அமைச்சர்கள் 
# தொடரும் காமெடி
அரசாங்கம்...

‘‘அம்மா, இனிமே டியூஷன்ல இருந்து என்னைக் கூட்டிட்டு வர அப்பாவை அனுப்பாதே!’’
‘‘ஏன்டா செல்லம்?’’
‘‘மிஸ்கிட்ட இருந்து அப்பாவை கூட்டிட்டு வர நான் படுற கஷ்டம் எனக்குத்தானே தெரியும்!’’