jokes
தலைவர் மகளை பெண் பார்க்க வந்தவங்க ‘ஹைடெக் குடும்பம்’ போலிருக்கு...’’ ‘‘எப்படிச் சொல்றே..?’’ ‘‘போய் லெட்டர் போடறோம்னு சொல்லாம, ‘மீம்ஸ் போடறோம்’னு சொல்றாங்களே!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
அந்த போலீஸ் ஸ்டேஷன் உள்ளே எதுக்கு ‘கடன் அன்பை முறிக்கும்’னு எழுதி வச்சிருக்காங்க..?’’ ‘‘நிறைய திருடங்க மாமூலை கடன் சொல்லிட்டுப் போயிடறாங்களாம்... அதான்!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
அவர் எதுக்கு ‘நாட்டுல பத்திரிகை சுதந்திரமே இல்லை’ன்னு சொல்லி கோபப்படறாரு..?’’ ‘‘பக்கத்து வீட்டுல ஓசில படிக்க பேப்பர் தர மாட்டேங்கிறாங்களாம்..!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
என்னதான் பெண்கள் தந்திரம் செய்தாலும், அதையும் ‘ராஜ தந்திரம்’னுதான் சொல்லுவாங்க... ‘ராணி தந்திரம்’னு சொல்ல மாட்டாங்க! - தந்திரம், மந்திரம் செய்யாமல் இயல்பாக தத்துவம் சொல்வோர் சங்கம் - ஏ.எஸ்.யோகானந்தம், ஒளவையார்பாளையம்.
வெள்ளை சட்டைக்கு ‘நீலம்’ போடலாம்... ஆனா நீல சட்டைக்கு ‘வெள்ளை’ போட முடியாது... இதுதான் வாழ்க்கை! - ஜே.தனலட்சுமி, கோவை.
நமக்கு எங்கேயோ மீல்ஸ் போடுறதா சொன்னியே... போய் சாப்பிட்டுட்டு வருவோமா?’’ ‘‘அது மீம்ஸ் தலைவரே!’’ - கி.ரவிக்குமார், நெய்வேலி.
இதுவரைக்கும் கோர்ட் வாசலையே மிதிச்சதில்லைன்னு தலைவர் சொல்றாரே... உண்மையா?’’ ‘‘ஆமா! ஒவ்வொரு தடவையும் கோர்ட்டுக்குக் கொண்டு போற வழியில தப்பிச்சிடுவாரு!’’ - எஸ்.வெங்கடசுப்பிரமணியன், கல்லடைக்குறிச்சி.
|