jokes



‘‘சி.பி.ஐ. அரெஸ்ட்டுக்கு பயந்து தலைமறைவான தலைவரை, நம்ம கட்சிக்காரங்களே காட்டிக் கொடுத்துட்டாங்களா... எப்படி?’’
‘‘ஊர் முழுக்க ‘பீகாரில் வாழும் திகாரே’ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்களாம்!’’

‘‘மாப்பிள்ளை போலீஸ்ல இருக்கார்னு சொன்னீங்களே... என்னவா இருக்கார்னு விசாரிச்சீங்களா?’’
‘‘அதைத்தான் போலீசும் விசாரிச்சுட்டு இருக்காங்களாம்...’’



‘‘எதுக்குய்யா ஆறாங்கிளாஸ் படிக்கிற பையன் நம்ம ஆபீஸுக்கு வந்துருக்கான்..?’’
‘‘சார், அது நம்ம படத்தோட ஹீரோதான்... புதுசா எடுக்கப் போற படத்துக்கு நீங்கதான் உடம்பை இளைச்சிட்டு வரச் சொன்னீங்களாமே..!’’

‘‘எதுக்குய்யா ஒரே காமெடி வசனமா எழுதிட்டு வந்துருக்கே..?’’
‘‘நீங்கதானே அடுத்து படுபயங் கரமான பேய்ப்படம் ஒண்ணு எடுக்கப் போறதா சொன்னீங்க!’’

- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.