தத்துவம் மச்சி தத்துவம்
வாங்க! உங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கணுமா... ஸ்கேன் எடுக்கணுமா..?’’ ‘‘நர்ஸ்கூட ஒரு செல்ஃபி எடுக்கணும் டாக்டர்!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘ஒரு கம்பத்தில கொடி பறந்தா, அது கொடிக்கம்பம். மின்சாரம் பாய்ஞ்சா அது மின்கம்பம். பூ இருந்தா அதை ‘பூகம்பம்’னு சொல்ல முடியுமா? - ஜி.தாரணி, அரசரடி.
ஏட்டய்யா! கபாலி ஏதோ ஆப் டவுன்லோடு பண்ணி உங்க மொபைல்ல போட்டுக்கச் சொல்லிட்டுப் போறானே... என்னவாம்?’’ ‘‘அவன் தற்சமயம் எந்த வீட்டுல புகுந்திருக்கான்னு அதுலயே பார்த்துக்கலாமாம்...’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
ஊரு பூரா விசாரிச்சு உங்க ஆஸ்பத்திரியில அட்மிட் ஆக வந்திருக்கிறேன் டாக்டர்...’’ ‘‘நான் அவ்வளவு பிரபலமா..?’’ ‘‘இல்லை... உங்க நர்ஸோட அழகு அவ்வளவு பிரபலம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
என்னதான் வலை போட்டு மீன்பிடிக்கலாம்னாலும், சிலந்தி வலை போட்டு யாராலும் மீன்பிடிக்க முடியாது! - காதல் வலையில் விழுந்தோர் சங்கம் - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
என்ன இது! எனக்கு கண் திடீர்னு நல்ல பிரகாசமா தெரியுது..?’’ ‘‘ஐயையோ! நான் மறந்துபோய் சொட்டு மருந்துக்கு பதிலா சொட்டு நீலத்தைப் போட்டுட்டேன் போலிருக்கு...’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
உங்க கண்ணுல என்ன கோளாறு..?’’ ‘‘கனவுல நமீதா ஒல்லியாவும், தமன்னா குண்டாவும் வர்றாங்க டாக்டர்!’’ - ரியாஸ், சேலம்.
|