வேங்கை

ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர். அவருக்கு ஹீரோ மாதிரி ஒரு பையன். அந்த ஹீரோவுக்கு தேவதை போல் ஒரு காதலி. வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் போதுமா?! வில்லன் வேண்டாமா? அதுவும் உண்டு. மீதிக் கதையை நீங்கள் சொல்வீர்கள் என்பதால் எழுதவில்லை.
காதல் சென்டிமென்ட் ஆக்ஷன் என்று ஏற்கனவே பழகிய ரோல் என்பதால் டன் கணக்கில் அல்வா சாப்பிடுவது போல் புகுந்து விளையாடுகிறார் தனுஷ். எனக்கு நடனமாடவும் தெரியும். நடிக்கவும் தெரியும் என்கிறார் தமன்னா.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே வாழும் ராஜ்கிரணை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பிரகாஷ் ராஜ் வில்லத்தனம் மட்டும் காண்பிக்காமல் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் விவேகாவின் ‘காலங்காத் தாலே...’ பாடல் மீண்டும் கேட்க தூண்டுகிறது. தன் வழக்கத்தின் படி கச்சிதமான கமர்ஷியல் படத்தை கொடுத் துள்ளார் இயக்குனர் ஹரி.
|