சொல்லி அடிக்கிறார் சோனாக்க்ஷி!



பாலிவுட்டின் டாப் லிஸ்ட்டில் இருந்த கேத்ரினா கைப், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா என மூவரும் இப்போது இறங்குமுகம் காண ஆரம்பித்துவிட்டனர். இளம் நடிகைகள் படை இந்தி சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறது.

சோனாக்க்ஷி  சின்ஹா, அனுஷ்கா சர்மா, அலியா பட், பரிணீதி சோப்ரா, ஷ்ரத்தா கபூர் என கடும் போட்டியில் இவர்கள் களம் இறங்கியுள்ளனர். இதில் பிரியங்கா காலத்து ஒரு நடிகை மட்டும் இளம் நடிகைகளுடன் ஏட்டிக்குப் போட்டியாக மல்லுக்கட்டி நின்று வருகிறார். அவர் தீபிகா படுகோன்.

 தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள், டைரக்டர்களின் கருணைப் பார்வை அவர் மீது பட்டபடி இருப்பதுதான் ஃபீல்டில் அவர் நிலைக்க காரணமாக சொல்லப்படுகிறது. இப்போது இளம் படையில் டாப் யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க சோனாக்க்ஷி! சின்ஹாவும் அனுஷ்கா சர்மாவும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அனுஷ்கா சர்மா, ஷாருக்கானுடன் 'ரப்னே பனாதி ஜோடி', 'ஜப் தக் ஹே ஜான்' படங்களில் நடித்துவ¤ட்டார்.

 இப்போது ஆமிர்கானுடன் 'பிகே' படத்திலும் நடித்திருக்கிறார். சோனாக்ஷியைப் பொறுத்தவரை சல்மானைத் தவிர மற்ற 2 கான் நடிகர்களுடனும் அவர் நடிக்கவில்லை. ஆனால் கான்களுக்கு அடுத்தபடியாக உள்ள அஜய் தேவ்கன், அக்ஷய்குமாருடன் தொடர்ந்து நடித்தபடி இருக்கிறார்.

அனுஷ்கா சர்மா, அடுத்தடுத்து சில தோல்விப் படங்களையும் கொடுத்திருக்கிறார். 'பிகே' படம் தவிர அவரிடம் பெரிய ஹீரோக்களின் படம் எதுவும் இல்லை. கிரிக்கெட் வீரர் கோஹ்லியுடன் அவர் காதல் வயப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

இதனால் வரும் வாய்ப்புகளும் மங்கத் தொடங்கியுள்ளன. அலியா பட், பரிணீதி சோப்ரா, ஷ்ரத்தா கபூர் டாப் கியரில் போனாலும் இவர்களுக்கு இதுவரை எந்த டாப் ஹீரோ படமும் அமையவில்லை. முன்னேற¤ வரும் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே இவர்கள் நடித்து வருகிறார்கள். அந்தப் படங்கள் தொடர் ஹிட் கொடுப்பதால் இவர்கள் சோனாக்ஷி, அனுஷ்காவுக்கு அடுத்தபடியாக உள்ளனர்.

தனது ரகசிய காதலை மறைத¢து வாழும் சோனாக்ஷி காட்டில்தான் தற்போது மழை. தொடர்ந்து 100 கோடி ரூபாய் பிசினஸ் செய்யும் படங்களைத் தரும் பிரபுதேவாவின் செல்லக்குட்டியாக சோனாக்ஷி இருப்பதும் அவருக்கு பெரும் பலமாக உள்ளது. தொடர்ந்து பிரபுதேவாவின் டைரக்ஷனில் 3வது படத்தில் (அடுத்த மாதம் ரிலீசாகும் ஆக்ஷன் ஜாக்சன்) நடித்துள்ளார் சோனாக்ஷி. அதேபோல் நம்மூர் முருகதாஸும் சோனாக்ஷியின் ஃபேவரைட் டைரக்டராகி விட்டார்.

 'ஹாலிடே' ('துப்பாக்கி' ரீமேக்) படத்தில் அக்ஷய்குமாருடன் சோனாக்ஷியை இயக¢கியவர், அடுத்து இந்தியில் இயக்கும் ஹீரோயின் சப்ஜெக்ட்டிலும் சோனாக்ஷியைத்தான் செலக்ட் செய்திருக்கிறார். இதில் ஆக்ஷன் ஹீரோயினாக அவர் அவதாரம் எடுக்கிறார்.' சீக்கிரமே உன்னோடு ஒரு படத்துல நடிக்கணும்' என ஷாருக்கானும் சோனாக்ஷியிடம் சொல்லியிருக்கிறார். இதனால் போட்டியாளர்களை ஓரம்கட்டிவிட்டு சோனாக்ஷி நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி வருகிறார் என்றே பாலிவுட் பட்சி சொல்கிறது.

-ஜியா