குரல் His Mind Voice



வணக்கம் பாஸ்! சமாளிக்கமுடியல பாஸ்! ஒரு படத்துல குடிகார கேரக்டர்ல நடிச்சிட்டா அதையே புடிச்சிக்கிறாங்க. ஸ்க்ரிப்ட்டு எழுதும்போதே 'மது குடிக்கும் கேரக்டருக்கு மயில்சாமி'ன்னு நோட் பண்ணிக்குவாங்க போல. இப்பிடியே விட்டா, மயில்சாமிங்ற பேர ஒயின்சாமின்னு மாத்திடுவாங்க. ராவா குடிக்கச் சொல்லி, ராப்பகலா நடிக்கச் சொன்னாலும் அசத்தலா ஆக்ட் பண்ணீர லாம் பாஸ்! ஆனா, கூல்ட்ரிங்ஸ குடிச்சிட்டு ஃபுல் பெர்ஃபாமென்ஸ் காட்டணும்னா மைண்டு ஆஃப் ஆயிடுது பாஸ்!

சினிமா 'பிராந்தி'யத்துல நிக்கணும்ன்னா ‘நேரம் நல்லா இருக்கணும் பாஸ். இல்லேன்னா மட்டையாக்கி மல்லாக்கப் படுக்கவச்சிருவாங்க.' அப்புறம் மார்'ஜின்' போடாத ஒயிட் ஷீட் மாதிரி மொட்டையா ஆயிடுவோம். வெஸ்ட்ல இருக்கலாம், ஈஸ்ட்ல இருக்கலாம். ஆனா ரெஸ்ட்ல மட்டும் இருந்துடக்கூடாது பாஸ்! கெஸ்ட்டா பண்ணினாலும் பெஸ்ட்டா பண்ணினாதான் நெக்ஸ்ட்ல சான்ஸ் கெடைக்கும்.

காமெடிய காமெடியா பண்ணலேன்னா, அதுவே காமெடி ஆயிடும் பாஸ்! அப்புறம் நமக்கு சீரியஸ்தான். கூட இருந்தே குழிபறிக்கிறவங்க சினிமாவுல கொள்ளப்பேரு இருக்காங்க. அந்தக் குழியிலயே ஒரு மரத்த நட்டு வச்சிட்டு நாம ஏறிப் போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

நெல்பா