மட்டன் கோலா உருண்டை



தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 100 கிராம்,
சிறிய வெங்காயம் - 100 கிராம்,
பட்டை - 10 கிராம்,
லவங்கம் - 5 கிராம்,
சோம்பு - 15 கிராம்,
வரமிளகாய் - 50 கிராம்,
முழு தனியா - 50 கிராம்,
உடைத்த  கடலை மாவு - 100 கிராம்,
எண்ணெய் - 1/2 கிலோ,
உப்பு - தேவைக்கு.

செய்முறை


வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பட்டை, கிராம்பு, லவங்கம் சோம்பு, வரமிளகாய், தனியா எல்லாவற்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும். மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு எலும்பினை நீக்கி மிக்சியில் கீமாவாக செய்யவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பொடித்த மசாலா மற்றும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து உருண்டையாக பிடித்து எண்ணையில் பொரித்து எடுக்கலாம்.