மேங்கோ -ஸ்ட்ராபெர்ரி வெரைன்ஸ்



என்னென்ன தேவை?

பால் - 1 1/2 கப்,
மேங்கோ கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்,
ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
மேங்கோ பல்ப் - 2 டேபிள்ஸ்பூன்,
ஸ்ட்ராபெர்ரி பல்ப் - 2 டேபிள்ஸ்பூன். (மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் அரைத்தால் திக் மேங்கோ பல்ப் கிடைக்கும். ஸ்ட்ராபெர்ரிக்கும் இப்படிச் செய்யலாம்.)

எப்படிச் செய்வது?

 மேங்கோ கஸ்டர்டு பவுடரை 1 டீஸ்பூன் பாலுடன் சேர்த்து நீர்த்த கரைசலாக்கிக் கொள்ளவும். 3/4 கப் பாலை, 1 டீஸ்பூன் சர்க்கரையுடன் அடிகனமான பாத்திரத்தில் கொதிக்க விடவும். மேங்கோ கஸ்டர்டு பவுடர் பேஸ்ட் சேர்க்கவும். கட்டிகள் எதுவுமில்லாமல் கலக்கவும். விரைவில் திக் ஆகி விடும் என்பதால் தொடர்ந்து கிளறவும். இந்த கஸ்டர்ட் கெட்டியாகவும் க்ரீமியாகவும் ஆகும் போது கரண்டியில் ஒட்டிக் கொள்ளும். அப்போது அடுப்பை அணைக்கவும்.

இதை குளிர வைத்து, மேங்கோ பல்ப் சேர்த்து நன்கு கலக்கவும். மேங்கோ கஸ்டர்டு மிக்ஸரை ஸ்பூனால் ஒரு டம்ளரில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.  ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டு பவுடரை 1 டீஸ்பூன் பாலுடன் சேர்த்து நீர்த்த கரைசலாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 3/4 கப் பாலை 1 டீஸ்பூன் சர்க்கரையுடன் கொதிக்க வைக்கவும். இத்துடன் ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டு மில்க் பேஸ்ட் சேர்க்கவும்.

கட்டி வராமல், விடாமல் கிளறி, கெட்டியானவுடன் குளிர வைக்கவும். இத்துடன் ஸ்ட்ராபெர்ரி பல்ப் சேர்க்கவும்.  இதை டம்ளரில் ஊற்றி, ஃப்ரிட்ஜில்  குளிர வைத்து, எடுத்து, ஏற்கனவே தயாரித்த ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டை அடுத்த லேயராக சேர்க்கவும். இதன் மேல் மேங்கோ கஸ்டர்டு சேர்க்கவும். இப்படியே மாற்றி மாற்றி கிளாஸ் முழுவதும் செய்யவும். மேலே சீவிய மாம்பழங்களை தூவவும். 1 மணி நேரம் குளிர வைத்துப் பரிமாறவும்.