TNPSC அனைத்துப் போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடப் பலதரப்பட்ட போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தப் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களையும், உதாரணங்களையும் இப்பகுதியில் பார்த்துவருகிறோம். சமீபகாலமாக அறிவியல் பாடப்பிரிவுகளில் கேட்கப்படும் வினாக்கள் சார்ந்த தகவல்களை இனிப் பார்ப்போம்.

எந்திரவியல்

*மிகத் துல்லியமாக நேரத்தை அளக்கப் பயன்படும் சாதனம், மின்னியல் கடிகாரம்.

*தஞ்சாவூர் பொம்மை நடுநிலைச் சமநிலையில் உள்ளது.

*நிலையான பரும மதிப்பினையும், பரப்பு இழுவிசையையும் கொண்டது திரவம்.

*காற்றழுத்தத்தை அளக்க  உதவும் கருவி பாரமானி.

*பாரமானியில் திரவமாகப் பயன்படுவது பாதரசம்.

*வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி பார்ட்டின் பாரமானி.

*வளிமண்டலக் காற்றின் அழுத்தம் 76 செ.மீ. பாதரச அழுத்தமாகும்.

*அனிராய்டு பாரமானி திரவமற்ற பாரமானியாகும்.

*மின்சார மணி இயங்கும்போது மின்னாற்றல் எந்திர ஆற்றலாக மாறி, பின்னர் ஒலி ஆற்றலைத் தருகிறது.

*ஒரு வினாடியில் மின் ஆற்றலால் செய்யப்படும் வேலை மின்திறன் எனப்படும்.

*சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற சூரிய மின்கலம் பயன்படுகிறது.

*சைக்கிள் டைனமோ சுழலும்போது எந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாறி, பின்னர் ஒளி ஆற்றலைத் தருகிறது. மின் இழை விளக்கில் மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாறி பல்பு சூடாகின்றது.

*மின் கலங்களில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

*மைக்ரோபோனில் ஒலி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

மையநோக்கு விசை: வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது வட்டத்தின் மையத்தை நோக்கிச் செயல்படும் விசை, மையநோக்கு விசை எனப்படும்.

*புவியின் மீது துருவப் பகுதிகளில் மையநோக்குவிசை குறைவாகவும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாகவும் உள்ளது.மையவிலக்கு விசை: வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது வட்டத்தின் மையத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி செயல்படும் விசை, மையவிலக்கு விசை எனப்படும்.

மையவிலக்கு விசையின் பயன்பாடுகள்: சுழற்சி செயல்பாட்டின் அடிப்படையில் வெவ்வேறு எடை அல்லது அடர்த்தி கொண்ட பொருள்களைப் பிரித்து எடுக்க மைய விலக்கிகள் பயன்படுகின்றன.

*பிளாஸ்மாவிலிருந்து ரத்த செயல்களைப் பிரித்தெடுக்கவும், பால் பிரித்தெடுப்பான் மூலம் பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்கவும் இந்த மையவிலக்கிகள் பயன்படுகின்றன.

மூலக்கூறு விசை: பரப்பு இழுவிசை ஒரு மூலக்கூறு கொள்கை ஆகும். மூலக்கூறுகளுக்கிடையே இரு வகையான ஈர்ப்பு விசைகள் செயல்படுகின்றன.

1. வேறின ஈர்ப்பு விசை
2. ஓரின ஈர்ப்பு விசை
வெவ்வேறு பொருட்களின் மூலக்கூறுகளுக்கு இடையேயான ஈர்ப்பு விசை, வேறின ஈர்ப்பு விசை எனப்படும்.(எ.கா.) பசைக்கும், தாளுக்கும் இடையே உள்ளது வேறின ஈர்ப்பு விசை.வளிமண்டல அழுத்தம்: ஊசி போடும் கருவி வளிமண்டல அழுத்தத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

*விமானத்தில் பயணம் செய்பவர்களின் அழுத்தம், காற்றுப் பம்பின் உதவியால் சமன் செய்யப்படுகிறது.
*வளிமண்டல அழுத்தத்தை அளக்கும் கருவி பாரமானி.
*பாரமானியைக் கண்டுபிடித்தவர் டாரிசெல்லி.
*பார்டின் பாரமானி என்பது வளிமண்டல அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்,
*பாரமானி ஓர் இடத்தின் உயரத்தையும், தட்பவெப்பநிலையையும் அறிய உதவுகிறது.
*பாரமானியில் உயரம் உடனே குறைந்தால், புயல் வரும் காலநிலையைக் காட்டுகிறது.
*பாரமானியில் உயரம் சீராகக் குறைந்தால், மழையைக் காட்டுகிறது.
*பாரமானியில் உயரம் சீராக உயர்ந்தால், நல்ல காலநிலையினைக் காட்டுகிறது.
*சுரங்கத்தில் பாரமானியின் உயரம் சற்று உயர்ந்து காணப்படும். ஏனெனில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் அதிகரிக்கும்.
*கடலின் உட்புறம் செல்பவர்கள் எடுத்துச் செல்வது ஆக்ஸிஜன், ஹீலியம், நைட்ரஜன்.

பெர்னௌலி விதி: பாய்மரத்தின் வேகம் அதிகரிக்கும்போது அழுத்தம் குறையும்.

பெர்னௌலியின் பயன்பாடுகள்: 

1. சாராய விளக்கு
2. எண்ணெய்த் தூவி
3. வடிகட்டும் பம்பு

*வளிமண்டல அழுத்தம் மலைப்பகுதியில் குறைவு. கொதி நிலையும் குறைவு. (மலை உச்சியில் சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது)
*அழுத்து கலன். இதன் கொதிநிலை 1200 C அல்லது 1000 C செல்சியஸுக்கு மேல்.
*நீரின் கொதிநிலை 1000 C.
*நிறைக்கும் எடைக்கும் உள்ள தொடர்பு
*நிறை என்பது எல்லா இடத்திலும் ஒரே அளவாக இருக்கும். ஆனால் எடை என்பது இடத்திற்கு இடம் மாறுபடும்.
*பொருளின் எடை துருவத்தில் அதிகமாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
*பூமியின் உருவம் மற்றும் பூமி தன் அச்சில் சுற்றுதல் ஆகியவற்றின் காரணமாகப் பொருளின் எடையில் வேறுபாடு காணப்படுகிறது.
*ஒரு பொருளின் எடை நிலத்தில் இருப்பதைவிட உயரத்தில் செல்லும்போது குறையும்.
*ஒரு பொருளின் எடை நிலத்தில் இருப்பதைவிட சுரங்கத்தில் குறைவாக இருக்கும்.
*புவியின் மையப்பகுதியில் ஒரு பொருளின் எடை ஏறத்தாழ பூஜ்யமாக இருக்கும்.
*சந்திரனில் புவி ஈர்ப்பு முடுக்கம் புவியில் உள்ளது போல் ஆறில் ஒரு பங்கு ஆகும்.
*சூரியனின் புவி ஈர்ப்பு முடுக்கம் 274 மீ/வி.போட்டித்தேர்வை எதிர்கொள்ள தேவையான அறிவியல் பாடப்பிரிவில் தெரிந்துகொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்