கவிதைக்காரர்கள் வீதி
சமாதானக் கொடியென நம்பி வந்து செத்து விழுந்தன கிழித்த கோட்டில் எறும்புகள்! - நா.கோகிலன், ஜோலார்பேட்டை.
கைப்பேசியில் நலம் விசாரிப்புகள் கடும் பசியில் தபால் பெட்டி - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கனவு காண்பதென்னவோ வனச்சோலைகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும்தான்... ஆனால் வசப்படுவதெல்லாம் கழிப்பறைகளும் கரப்பான்பூச்சிகளுமாய் இருக்கிறது! - கு.வைரச்சந்திரன், திருச்சி.

நீரின் நிர்வாணம் மறைக்கிறது ஆகாயத் தாமரைகள் - வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.
மனமுருக வேண்டினர், வெளிநாட்டிலும் அருள்பாலித்தார் கடத்தப்பட்ட கடவுள்! - அ.ராஜப்பன், சென்னை-91.
தடம்புரண்டு செல்கிறது தண்டவாளத்தில் பட்டாம்பூச்சி! - சங்கீதா, மோகனூர்.
பறித்த மலரொன்றின் பரிசுத்தம் பற்றி சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் ஏதுமில்லை. - அ.கார்த்திகேயன், சேலம்.
|