ஜோக்ஸ்

‘‘எப்பல்லாம் உங்களுக்கு இதயம் வலிக்குது..?’’ ‘‘நர்ஸ் டியூட்டி முடிஞ்சு போகும்போதெல்லாம் டாக்டர்..!’’
‘‘என்ன இது... மேடையில எல்லாரும் குறட்டை விட்டு தூங்கறாங்க?’’ ‘‘மேடையில குட்டிக் கதைகள் சொல்லிட்டிருந்த தலைவர், இப்ப முழுநாவலே சொல்லுறாராம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘என்னய்யா இது... மாமூல் டாலர்ல வந்திருக்கு?’’ ‘‘நாம வளர்த்துவிட்ட திருடன்கள் இப்ப வெளிநாட்டுலயும் இருக்காங்க சார்..!’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘தலைவரோட அப்பாவித்தனத்துக்கு அளவே இல்லை...’’ ‘‘ஏன்... என்ன செஞ்சார்?’’ ‘‘குற்றப் பத்திரிகை கொடுத்திருக்காங்களே... எவ்வளவு மொய் வைக்கணும்னு கேட்குறார்!’’ - ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
‘‘தலைவர் மேடையில ஏன் ரொம்ப கோபமா உட்கார்ந்திருக்காரு..?’’ ‘‘அவரோட செருப்பையே திருடி அவர் மேல யாரோ வீசிட்டாங்களாம்...’’ - மு.மதிவாணன், அரூர்.
‘‘எதிரியின் போர் ஓலைக்கு என்ன பதில் எழுதட்டும் மன்னா..?’’ ‘‘பதுங்கு குழிகள் அனைத்திலும் மழைநீர் நிரம்பியுள்ளதால், இரண்டு வாரம் கழித்து கிளம்பி வரச் சொல்லும்...’’ - சரவணன், கொளக்குடி.
‘‘மகளிரணித் தலைவியை நம்ம தலைவர், யாருக்கும் தெரியாம ரகசியக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு எதை வச்சு சந்தேகப்படறே..?’’ ‘‘மேடையிலகூட அவங்க முன்னால பேசறதுக்கு பயப்படறாரே...’’ - கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.
|