ஃபேஷன் பிசினஸில் குதித்த பில் கேட்ஸ் மகள்!
உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸின் மகள், ஃபேஷன் பிசினஸில் இறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பில் கேட்ஸ், மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் தம்பதியின் இளைய மகள் ஃபோபி. 22 வயதான இவர் கடந்த ஆண்டுதான் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஹியூமன் பயாலஜி கோர்ஸ் முடித்தார்.

இந்நிலையில் தனது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அறைத்தோழி சோபியா கியானியுடன் இணைந்து, ‘The Burnouts’ என்ற பாட்காஸ்ட் சேனலை ஆரம்பித்தார். பின்னர், ‘phia’ என்ற ஃபேஷன் இணையதளத்தையும் தொடங்கினார்.
இதன்வழியே ஃபேஷன் பொருட்கள அனைத்தையும் ஆர்டர் செய்து வாங்கமுடியும்.‘‘எங்கள் நோக்கமே உங்களை வீட்டிலிருந்தபடியே புத்திசாலியான ஷாப்பிங் செய்பவராக மாற்றுவதுதான்’’ என தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்துள்ளார் ஃபோபி. தன்னுடைய தந்தை பில் கேட்ஸிடம் இதுகுறித்து சொன்னபோது, ‘நிச்சயமாக இதை நீ செய்ய விரும்புகிறாயா?’ என அவர் ஆச்சரியமாகக் கேட்டதாகக் குறிப்பிடும் ஃபோபி, ‘‘நான் பில் கேட்ஸின் மகள் என்றாலும் எனக்கான ஓர் அடையாளத்தை வைத்திருக்கவே விரும்புகிறேன்’’ என்கிறார்.
பி.கே
|