All வைரஸை அழிக்க ஒரே தடுப்பூசி!



அமெரிக்காவில் உள்ள ரிவர்சைடு நகர கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அனைத்து வைரஸ் திரிபுகளையும் எதிர்த்துப் போராடக்கூடிய வகையிலான தடுப்பூசி ஒன்றை புதிதாக உருவாக்கியுள்ளனர். 
 இது குழந்தைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வழக்கமான நோய் எதிர்ப்புக்கான விஷயங்களை இந்தத் தடுப்பூசியில் செய்யாமல், சிறிய RNA மூலக்கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.

இந்த அணுகுமுறையில் உடலின் RNA-யை தூண்டி வைரஸை பலவீனப்படுத்துகிறோம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது, ஒரு குறிப்பிட்ட வைரஸ் உடலுக்குள் போகும்போது அதை எதிர்த்து போராட நமது நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிகளை இயற்கையாகவே உருவாக்கும். ஆனால், இந்தப் புதிய தடுப்பூசி வைரஸ் பரவலை நிறுத்தும்வகையில் சிறிய சமிக்ஞை RNA புரதங்களை உருவாக்க உடலுக்குக் கற்றுக்கொடுக்கும். இதனால், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும்.

இந்தத் தடுப்பூசியின் ஒரு டோஸை எலிகளுக்கு போட்டு சோதித்துப் பார்த்தபோது 90 நாட்கள் பாதுகாப்பு கிடைப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதனால், பலதரப்பட்ட தடுப்பூசிகளின் தேவையும் இருக்காது என்கின்றனர்.

பி.கே.